பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் விதமாக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், பாலியல் வன்கொடுமை, பெண்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 43,000 பேரை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன், இணையத்தில் ஆபாச படங்கள் பார்த்த மற்றும் காட்சிப் பதிவுகளை பதிவிறக்கம் செய்த 13,000 பேருக்கு சைபர் பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.