குடந்தை, ஜூலை 11- குடந்தையில் நேற்று (10.7.2023) திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் 50 ஆவது பிறந்தநாள் காணும் ‘விடுதலை தமிழ் புலிகள்’ கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசனுக்குப் பயனாடை அணிவித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 இல் 80 புத்தகத்தை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்
தலைமைக் கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாநில பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு தலைவர் அழகிரிசாமி, குடந்தை கழக மாவட்ட தலைவர் கு. நிம்மதி, பொதுக்குழு உறுப்பினர் மற்றும் இளைஞரணி தலைவர் க. சிவகுமார், குடந்தை மாவட்ட துணை செயலாளர்தமிழ் மணி, முனைவர்
ச. அஜிதன், அசூர் செல்வம், மாவட்ட இளை ஞரணி துணை செயலாளர் அ. அரவிந்தன், க. ரிசுவான், ரியாஸ் அகமது, அசூர் செல்வம் திராவிடர் மாணவர் கழக பொறுப்பாளர்கள் லட்சுமணன், அஸ்வின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் குடந்தை அரசனின் 50 ஆம் ஆண்டு பிறந்தநாளில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் அலைபேசி மூலமாக வாழ்த்தினார்.