தொழிலாளர்கள் வாரம் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தவறான வாதம் என அகிலேஷ் கூறியுள்ளார். இத்தகைய யோசனை மனிதர்களுக்கா அல்லது ரோபோக்களுக்கா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வேலையின் தரம், அதன் அளவை விட மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், தொழிலாளர்களுக்கும் தனிமனித சுதந்திரம், குடும்பம், பொழுதுபோக்கு இருப்பதை நிராகரிக்க முடியாது என்றார்.