வடுவூர், ஜூலை 11- 1998ஆம் ஆண்டு வடுவூரில் தமிழர் தலைவர் ஆசிரியரால் திறந்து வைக்கப்பட்ட தந்தை பெரியார் முழு உருவ சிலை சாலை விரிவாக்கப் பணி காரணமாக இடம் மாற்றி அமைக்கப்பட்டு அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் 09.07.2023 மாலை 5 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு வ.த.நலிராசன் தலைமையில் மாலை அணிவித்து கழக கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடபட்டது.
அய்யா சிலை மறுசீரமைப்பு பணியை தனது சொந்த செலவில் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன் செய்து உதவினார்.
சிலை அமையும் இடத்தை பேரூராட்சி தீர்மானம் மூலம் வடுவூர் தென்பாதி ஊராட்சி மன்ற தலைவர் வழங்கி சிறப் பித்தார்
விழாவில் செங்குட்டுவனுக்கு பொதுக் குழு உறுப்பினர் சிவஞானம் பயனாடை அணிவித்து சிறப்பித்தார். வடுவூர் தென் பாதி ஊராட்சி மன்ற தலைவர் தன.சூரிய சேகருக்கு செங்குட்டுவன் பயனாடை அணிவித்தார்.
விழாவில் மன்னார்குடி கழக மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்ட செயலாளர் கோ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் சிவஞானம், மாவட்ட ப.க. ஆசிரியரணி தலைவர் த.வீரமணி, மாவட்ட ப.க. ஆசிரியரணி செயலாளர் இரா.கோபால், மாவட்ட ப.க. செயலாளர் நா.உ.கல்யாணசுந்தரம், கழக சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், மன்னை ஒன்றிய செயலாளர் மு.தமிழ் செல்வம், நீடா ஒன்றிய தலைவர் தங்க. பிச்சைக்கண்ணு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.இளங்கோவன், மன்னை நகர செயலாளர் மு.இராமதாசு, மன்னார்குடி கழக பொறுப்பாளர்கள் மு.சந்திரபோஸ், வே.அழகேசன், மா.மணிகண்டன், மேல வாசல் கழகத் தோழர்கள் கோ.திரிசங்கு, அ.குணசேகரன், நீடாமங்கலம் கழகத் தோழர்கள் மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஸ், பெரிய கோட்டை சுருளிராசன், ஜீவா, ராயபுரம் சக்திவேல், புள்ளவராயன் குடிகாடு கலியமூர்த்தி, எடமேலையூர் பி.வீராச்சாமி, லெட்சுமணன், கருவாகுறிச்சி கோபாலகிருட்டிணன், நல்லிக்கோட்டை சி.நல்லதம்பி வடுவூர் சாமிநாதன் (வேளாண் துறை), செல்வ.இளங்கோவன், வி.சண்முகம், க.அன்பழகன்,
பி.செயராமன், தனபால், ஆர்.ஜனார்த்தனன், புதுக்கோட்டை வே.தமிழ்மணி, வடுவூர் சா.சிபிராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். சிலை சீரமைப்பு பேருதவி புரிந்த வடுவூர் ஊராட்சி மன்ற தலைவர் ந.பாலசுந்தரத்திற்கு சிவஞானம் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். வடுவூர் பேராசிரியர் ந.எழில் அரசன் தலைமையில் வடுவூர் கழகத் தோழர்கள் நமசிவாயம், லோகநாதன், ஆசை ஒளி உலகநாதன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். சிலை மறு சீரமைப்பு பணி முழுவதையும் தனது சொந்த செலவில் செய்து உதவிய மண்ணின் மைந்தர் தென்சென்னை மாவட்ட கழக துணைத் தலைவர் செங்குட்டுவனை வடுவூர் பொது மக்களும், கழகத் தோழர்களும் வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர்.