மண்டலக்கோட்டையை சேர்ந்த கழகத் தோழர் க.சுரேந்திரனின் பெரியம்மா மா.நருவுசு (எ) தெய்வானை கடந்த மாதம் 18 ஆம் தேதி மறைந்தார். அவரின் நினைவேந்தல் நிகழ்ச்சி மண்டலக்கோட்டையில் 04.03.2025 அன்று மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மறைந்த நருவுசு (எ) தெய்வானை படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றினார். உரத்தநாடு தெற்கு ஒன்றிய தலைவர் த.ஜெகநாதன், துணைத் தலைவர் கு.லெனின், தி.மு.க. மேனாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் க.ரவிச்சந்திரன், புலவர் இரா.மோகன்தாஸ், அ.செந்தில்குமார் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார். மாணவர் கழகத் தோழர்கள் சற்குணம், அலெக்ஸ், சங்கீத் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.