திருமானூர், ஜூலை 11- அரியலூர் மாவட் டம் திருமானூர் ஒன்றிய கழகக் கலந் துரையாடல் கூட்டம் 5 .7.2023 அன்று இரவு 7 மணியளவில் திருமானூர் சு.சேகர் இல்லத்தில் நடைபெற்றது மாவட்ட கழகத் தலைவர் விடுதலை நீலமேகம் தலைமை ஏற்க, மாவட்ட செயலாளர் மு.கோபால கிருஷ்ணன் ,மாவட்ட அமைப்பாளர் ரத்தின. ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் க. சிற்றரசு, ஒன்றிய செயலாளர் கோபி நாதன், சே.பிரபாகரன், முருகானந்தம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும் தோழர் களும் பங்கேற்று இயக்க வளர்ச்சிகள் குறித்து கருத்துகளை தெரிவித்தப் பின்னர் தலைமைக் கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன் பொதுக்குழுத் தீர்மானங்கள் குறித்தும், இயக்க இலட் சியக் கொடி எங்கும் பறக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், தெருமுனைப் பிரச் சாரங்கள் அதிகமாக நடத்தப்பட வேண் டும் என்பதை வலியுறுத்தியும் சிறப்புரை யாற்றினார்.
வரலாற்று சிறப்புமிக்க ஈரோடு கழகப் பொதுக் குழுவின் தீர்மானங்களை சிறப்பாக செயல்படுத்துவது எனவும், கழகத் தோழர்கள் இல்லங்கள் தோறும், கிளை கழகம் தோறும் கழகக் கொடி ஏற்றுவதெனவும், வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா ஆகியவற்றை சிறப்பிக்கும் வகை யில் முக்கிய ஊர்களில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்திடுவதென முடிவு செய்யப்பட்டது. ஜாதி ஒழிப்பு வீரர் தத்தனூர் துரைக்கண்ணு மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.