“மணியோசை” கல்வியால் காணும் ஆரிய – திராவிட இருவேறு தரவரிசை

3 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒரு சிறு எடுத்துக்காட்டு

கி.வீரமணி

கல்வி என்ற அறிவுத் தூண்டல் பெறுகின்ற உரிமை தனி நபர்களுக்கு மட்டும் தான் உள்ள உரிமை என்று சமுதாயத்தின் துவக்க காலத்தில் கருதி, அதை தனிநபர் ஏகபோக உடைமையாக உயர் வர்க்கம் வைத்துக் கொண்டது!

கல்வி பரவுவதற்கு முக்கிய காரணம் கருவி – எழுத்து. 

அவை தனியே களிமண்ணில் விரலால் எழு தப்பட்டு, சீன தேசத்து அரசர்களுக்கு அங்கே யுள்ள ஆசான்கள், அவர்தம் அரண்மனைகளில் போதித்தபோது, அதனை ரகசியமாக, தனி உடை மையாக, தனி உரிமையாகவே வைத்திருந்தனர் என்கிறார் பிரபல அறிவியல் எழுத்தாளரான அமெரிக்க இயற்பியல் பேராசிரியரான மிக்சியோ காக்கு (Michieo Kaku)!

எழுத்துக்களால் எழுதப்படாத வேதங்கள் ‘எழுதாக் கிளவி‘, வாய் மொழி மூலம் ஒருவர் ஒலியுடன் உச்சரிக்க மற்ற மாணவர்கள் அதனை திரும்பப் பிழையின்றி உச்சரித்து ஒலிக்க வேண்டும், அது ஒரு வகை மனப்பாடம்.

‘உபாத்தியாயர்’ என்ற சொல் – உப + அத்தியாயம் என்றாலே துணை – சொல்வதற்குத் துணையாக பயிற்சியாளருக்குச் சொல்லச் சொல்லி கேட்பவராகையால் உப + அத்தியாயர் – உத்தியாராகி பிறகு ‘வாத்தியார்‘ ஆகி வழக்கில், புழக்கத்தில் உள்ளது!

துவக்க காலத்தில் தனி உடைமைபோல இந்தக் கல்வியைப் பொத்திப் பொத்தி, தர முடியாததாக, மற்றவர்களுக்குக் கிட்டாத செல்வமாக வைத்த நிலையில், அதை வருண தர்மம் வகுத்த “உயர் ஜாதிப் பார்ப்பனர்கள்” ஒரு ஜாதி வர்ணத்திற்கே உரியதாக ஆக்கியதோடு, மற்ற வர்ணத்தார் அதிலும் குறிப்பாக கீழிலும் கீழாக வந்த பஞ்சமர், சூத்திரர் உள்பட 4, 5ஆம் ஜாதியாருக்கு, இந்த உரிமை கிடையாது; மீறினால் தண்டனை என்று எழுதி வைத்து மிரட்டி அடி பணிய வைத்தது சமூக வரலாறு!

ஆனால் இருவேறு பண்புகளைக் கொண்ட மக்களினத்தில் திராவிடர்கள் கூடி வாழ்ந்து கோடி நன்மைகளைப் பெற்றவர்கள்; அதன்மூலம் ஏராளம் கற்றவர்கள். அதைத் தாம் மட்டுமின்றி உலகத்தார் அனைவரும் பெற்றுப் பயன் பெற விழைந்தவர்கள்.

ஆரியம் குறுகிய பார்வை கொண்டது; மனி தர்களைப் பகுத்து பிரித்து அவர்களின் கல்விக் கண்களைப் பறித்து விட்டது! வசதிகளை தமக்கே ஏகபோகமாக வைத்துக் கொண்டது!!

கல்வி என்பதே “தோண்டி எடுத்தல்” என்ப தன் உள்ளடக்க சொல் ஆகும்.

‘கல்லுதல்’ – தோண்டுதல் தானே! ஆற்றல், திறமை ஒவ்வொரு மனிதரிடமும், பாலின வேறுபாடு இன்றி பரவலாக வந்தது! அதற்குரிய வாய்ப்பு வருகின்றபோது, அது வெளியே வந்து வெளிச்சம் காட்ட முடிகிறது! வாய்ப்பு கிட்ட வில்லையானால் அது முடிந்து விடுகிறது – அவர்களோடு!

தனி உடைமையாக, தனிநபர் செல்வமாக, தனி ஒருவரின் உரிமையாக இருந்த அக்கல் வியைப் பொதுமக்கள் – உலக மக்கள் அனை வரும் துய்ப்பதற்குரிய பொதுவுடைமையான தாக்கவே திராவிடம் அடிநாள் தொட்டே முயன்றது!

அதைவிடக் கூடாது என்பதே அந்நாள் முதல் இந்நாள் வரை இரு வகை மக்களின் தத்துவப் போராக, உரிமைப் போராகவே நடந்து வருகிறது!

இதற்கு ஏராளமான சான்றுகள், தரவுகளைக் காட்ட முடியும் நம்மால். 

ஒரு சிறு எடுத்துக்காட்டு:

வள்ளுவரது திருக்குறளை விட நல்ல சான்றாவணம்  – காலத்தை வென்ற கருத்தொளி – அறிவு வீச்சு வேறு இருக்க முடியாது என்ப தற்குக் கல்வி என்ற தலைப்பில், ஓர் குறளை ஆராய்வோம்:

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்  (குறள் 399)

இதன் கருத்து: கற்றறிந்த சான்றோர்கள், தாம் இன்பம் பெறுவதற்குக் காரணமாக இருக்கும் கல்வியறிவினால் உலகத்தாரும் சேர்ந்து இன்பம் அடைவதாகும் – காணும்போது, அவர்கள் அந் தக் கல்வியை மேலும் கற்கவே விரும்புவார்கள்.

என்னே பரந்த விரிந்த மனப்பாங்கு! தனக் கென வாழாப் பிறர்க்குரியதாக உலகம் ஆக வேண்டுமென்ற விழுமியம், விலை மதிப்பில்லா மானுட உயர்வுக்கான மகத்தான வழிகாட்டல் அல்லவா?

படி, படி என்று சொல்ல ஒரு தத்துவம்

– திராவிடம்!

படிக்காதே, நீ படிக்காதே, கீழ்ஜாதிக்காரனே படிப்பையே நினைக்காதே –

மீறினால் நாக்கறுப்போம், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றி உன்னைத் தண்டிப்போம் என்பதுதான் ஆரியம்!

அது ரத்தப் பரிசோதனையில் அல்ல தோழமையுடன் அறிவுப் பரிசோதனையில் –

பண்பாட்டுப் பரிசோதனையில் தான் தெரிகிறது; தெரிந்து கொள்வதற்குக் காரணம்: ஆரியம் மக்களைப் பிரித்துப் பார்த்து சனாதனம் எனும் தூக்குக் கயிற்றைத் தொங்கவிட்டு மக் களை அன்று முதல் இன்றைய “நீட்” வரை கொல் லும் தத்துவம்.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர், படிக்க வாருங்கள் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை” – அழைப்போம்.

“திராவிடம்” ஏன் – இப்போது – புரிகிறதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *