திருவாரூரில் வைக்கம் மனித உரிமை போராட்டத்தின் நூற்றாண்டு விழா பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் தீர்மானம்

2 Min Read

அரசியல்

திருவாரூர், ஜூலை 11- திருவாரூரில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரெ.ஈவேரா தலைமை வைத்தார். திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் சு.கிருஷ்ண மூர்த்தி, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் இரா.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன், திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக பேச்சாளர் பூவை. புலிகேசி ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிறப்புரை யாற்றிய தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் கூறியதாவது, மக்களிடம் அறிவியல் ஆராய்ச்சி உணர்வை தூண்டுகின்ற பணியில் பகுத்தறிவாளர் கழகம் ஈடுபட்டு வருகிறது. எங்கெல்லாம் மூடநம்பிக்கை மேலோங்குகிறதோ அங் கெல்லாம் பகுத்தறிவாளர்கள் கழகம் தன்னுடைய கட மையை செய்து வருகிறது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் பகுத்தறிவாளர் கழகம் முழு வீச்சில் பணி யாற்ற வேண்டும். உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்து கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் பேசினார். 

கூட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் வீரையன், முன்னாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனியாண்டி, திராவிடர் கழக மாவட்ட துணைத் தலைவர் அருண்காந்தி, மாவட்ட துணைச் செயலாளர் ராமலிங்கம், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் ஆறுமுகம், நன்னிலம் ஒன்றியத் தலைவர் கரிகாலன், திருவாரூர் நகர பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ராஜேஷ், நன்னிலம் ஒன்றிய தலைவர் ஆர்.தனராஜ், திருத் துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் சு.சித்தார்த்தன் நகரச் செயலாளர் ஆறுமுகம், திருவாரூர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: 

வைக்கத்தில் நடைபெற்ற மனித உரிமை போராட்டத் தின் நூற்றாண்டு விழா, மறைந்த திமுக தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர்களின் வரலாறு அறியும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.  

பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் மாதம் தோறும் கருத்தரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. 

பகுத்தறிவாளர் கழகத்தின் உறுப்பினர்களை புதுப் பித்தும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

கூட்டத்தில் திருவாரூர் நகர தலைவராக எஸ்.ராஜேஷ், செயலாளராக க.மாதவன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். நன்னிலம் ஒன்றியத் தலைவராக எஸ்.கரிகாலன், செயலாளராக மா.பாலசுப்பிரமணியன் ஆகியோரும், திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவராக அ.செல்வம், செயலாளராக அ.கோபி ஆகியோரும் தேர்வு செய்யப் பட்டனர். பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்டத் தலைவராக கோ.செந்தமிழ்செல்வி தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் ரெ.புகழேந்தி வரவேற்றார். இறுதியில் திருத்துறைப்பூண்டி ஒன்றியத் தலைவர் அ.செல்வம் நன்றி கூறினார். கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை தலைவர் தமிழ்ச் செல்வன் வழங்கினார். 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *