5.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பாஜகவை வீழ்த்த திராவிட இயக்கத்தால் மட்டுமே முடியும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தல்.
* மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் மன்னார் வளைகுடாவில் எரிவாயு கிணறுகளை அமைக்கக் கூடாது: நடவடிக்கையை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மக்களை வகுப்புவாத அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது; தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்காளர் பட்டியலை எவ்வாறு கையாண்டது என மம்தா குற்றச்சாட்டு.
* பீகாரின் அரசியல் சூழல் நாளுக்கு நாள் மிகவும் சுவாரஸ்யமாகி வருகிறது. நிதிஷ் தனது அபாரமான உயிர் வாழும் திறமைக்கு பெயர் பெற்ற ஒரு சாதுர்யமான தலைவர். வரும் நாட்களில் அனைவரின் கவனமும் அவரது விளையாட்டின் மீது இருக்கும். என்கிறது உருது பத்திரிக்கையான அக்பர்-இ-மஷ்ரிக்.
* “தென் மாநிலங்களில் எல்லை நிர்ணயம் ஒரு வாள் போல தொங்கிக்கொண்டிருப்பதாக அறிவிப்பதன் மூலம், மு.க.ஸ்டாலின் அனைத்து தென் மாநிலங்களின் கவலைகளையும் உரிமைகளையும் பாதுகாக்கும் தலைவராக ஆகியுள்ளார் என்கிறது சலார் பத்திரிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜார்க்கண்டில் 8000க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் ஒற்றை ஆசிரியருடன் செயல்படுகின்றன என்கிறார் அமைச்சர் ராம்தாஸ் சோரன்
* வட மாநிலங்களில் தமிழ் கற்பிக்க ஏன் ஒன்றிய அரசு ஒரு நிறுவனத்தை அமைக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
தி ஹிந்து:
* மோடி அரசு கொண்டு வந்த டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023, தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005அய் பலவீனப்படுத்துகிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு.
* மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான சிக்கல்கள் என்ன? தற்போது உள்ள 543 தொகுதி களில் மாற்றம் கூடாது என்பதை தெற்கிலிருந்து பிராந்திய மற்றும் தேசிய அரசியல் கட்சிகள், வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள், நாடாளுமன்றத்தில் உறுதி பெறுவது தான் தீர்வு என்கிறார் ரங்கராஜன் அய்.ஏ.எஸ்.
தி டெலிகிராப்:
* கனடா மீது டிரம்ப் வரி விதிப்பதால், அமெரிக்கா வில் பணவீக்கம் உயரும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எச்சரிக்கை.
* அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதற்காக ஜாமியா மாணவர்களை இடைநீக்கம் செய்ததை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது
டைம்ஸ் ஆப் இந்தியா:
* முஸ்லிம் வர்த்தகர்களை இந்து விழாக்களில் இருந்து தடை செய்ய வேண்டும் என்ற அசாம் சுகாதார அமைச்சர் அசோக் சிங்கால் பேச்சால், சர்ச்சை; சட்டமன்றத்தில் உரிமைத் தீர்மானம் கொண்டு வர ஏஅய்யுடிஎப் கோரிக்கை.
* ராஜஸ்தான் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தராக, பார்மசூடிகல்ஸ் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர் நியமனம்; ஆளுநர் முடிவுக்கு ராஜஸ்தான் மாநில இந்திய மருத்துவ கழகம் கடும் எதிர்ப்பு. திரும்பப் பெறவில்லை என்றால், போராட்டம் என அறிவிப்பு.
.- குடந்தை கருணா