பெரியாரியவாதியும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும். எழுத்தாளர். சிறந்த பேச்சாளர். கருத்தாளர். நகைச்சுவை பேச்சாளருமான மறைந்த கவிஞர் நந்தலாலா அவர்களின் உடலுக்கு திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் தோழர்கள் சங்கிலி முத்து, சு.ராஜசேகர், விஜயராகவன், ஆ.அறிவுச்சுடர், மலர்மன்னன், தமிழ்ச்சுடர், கனகராஜ், ராமதாஸ், சேவியர், திருஞான சம்பந்தம், விடுதலை செல்வம், பென்னி, ஜெயராஜ், வசந்தி, சங்கீதா, அமுதா, செந்தமிழினியன், ரூபியா ஸ்டாலின் மற்றும் முனைவர் செந்தாமரை, முனைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். (திருச்சி 5.3.2025)