‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாமில் 1,718 மனுக்களுக்கு உடனடித் தீர்வு அமைச்சா் சி.வி.கணேசன்

viduthalai
2 Min Read

சேலம்,மார்ச் 5- சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமில் 1,718 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளது என்று அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.

தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட புளியங்குறிச்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தாா்.

விழாவில் அமைச்சா் பேசியதாவது:

கடந்த 5 நாள்களாக ஆத்தூா், பெத்தநாயக்கன் பாளையம், தலைவாசல் பகுதிகளில் நடைபெற்ற ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்ட முகாமில் 1,718 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டுள்ளது.

தலைவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாவக்குறிச்சி, புனல்வாசல், தேவியாக்குறிச்சி, புளியங்குறிச்சி, ஊனத்தூா் ஆகிய 5 இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட மூன்றாம் கட்டமுகாம் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த முகாம்களில் அரசின் நலத்திட்ட உதவிகள் வேண்டி மனு அளித்தவா்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 439 பேருக்கு ரூ. 24.68 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், கடந்த 3 நாள்களாக நடைபெற்ற முகாமில் 1,279 பேருக்கு ரூ. 1.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 1,718 பேருக்கு ரூ. 1.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்த முகாமில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிகுமாா், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆா்.சிவலிங்கம், கு.சின்னதுரை, இணை இயக்குநா் (வேளாண்மை) சிங்காரம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) நீலாம்பாள், துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) மஞ்சுளா, மாவட்ட மேலாளா்(தாட்கோ) ராமதாஸ், உதவி ஆணையா் (தொழிலாளா்) நலத் துறை சங்கீதா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியா் அ.மயில், வருவாய் வட்டாட்சியா் பாலாஜி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ஜெர்மனி
மருத்துவமனைகளில் வேலை…
செவிலியர்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, மார்ச் 5- அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஜெர்மன் நாட்டிலுள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு ஆறு மாதம் பணி அனுபவம் பெற்ற 35 வயதிற்க்குட்பட்ட, டிப்ளமோ மற்றும் பட்டதாரி ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு பி1, பி2 நிலையில் இலவசமாக ஜெர்மன் மொழி பயிற்றுவித்து மாத ஊதியமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ளவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட் (கடவுச் சீட்டு) ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட ஒளிப்படத்துடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 15.03.2025க்குள் அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளமான www.omcmanpower.tn.gov.in மற்றும் 044- 22505886/ 63791 79200 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *