வல்லம், மார்ச் 4- பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் நாளையொட்டி வேதியியல் துறை பெரியார் புரா மற்றும் ஆற்றல் மற்றும் சுற்று சூழல் மய்யம் இணைந்து நடத்திய விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு மேற்கொள்ள வேண்டிய விவசாய வழிமுறைகள் குறித்த பயிற்சிப் பட்டறை நிகழ்வில் பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி, பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் வி.இராமச்சந்திரன், தஞ்சாவூர் விவசாய பல்கலைக்கழக மேனாள் புலமையர் பி.மோகன், தஞ்சாவூர் மாசு கட்டுப்பாடு வாரியப் பொறியாளர் டி.டி.அஜித், மற்றும் உயிர் தொழில்நுட்ப பேராசிரியர் ப.சுகுமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் அறிவு சார் மய்யத்தில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளும் குழந்தை விஞ்ஞானிகள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் குறித்து விளக்கினார்கள். இறுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
(28.2.2025)
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய அறிவியல் நாள் விழா

Leave a Comment