4.3.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*தொகுதி மறுசீரமைப்பில் மாநில அரசுகளின் கருத்தைக் கேளுங்கள்: ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி. வேண்டுகோள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மகா கும்பமேளாவின் போது புகழ் பெற்ற ‘அய்அய்டி பாபா’ ஜெய்ப்பூரில் கஞ்சாவுடன் பிடி பட்டார். (இனி ‘கஞ்சா பாபா’ என அழைக்கலாமா?)
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆர்.எஸ்.எஸ்.-இன் அடிமை பாஜக. அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவர்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பேட்டி.
தி இந்து:
* தமிழ்நாடுதான் அதிக அளவில் பெண் கடன் வாங்குபவர்களை கொண்டுள்ளது. இந்தியாவின் நிதி வளர்ச்சிக் கதையில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் நிட்டி ஆயோக் அறிக்கை வெளியீடு.
* அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்க கவுரவம் பார்க்க வேண்டாம்: இது நமது உரிமை காக்கும் பிரச்சனை; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் அழைப்பு.
தி டெலிகிராப்:
* அமெரிக்காவிற்கு இந்தியாவில் இருந்து கள்ளத்தனமாக அனுப்புவதற்கு உகந்த மாநிலமாக குஜராத்தை தேர்ந்தெடுத்தனர் ஏஜெண்டுகள். தங்கள் வாடிக்கையாளர்களை கனடிய கல்லூரிகளில் – அவற்றில் பல அமெ ரிக்க எல்லைக்கு அருகில் அமைந்துள்ள – மாணவர் விசாக்களில் சேர்க்கிறார்கள். இந்த குடியேறிகள் கனடாவை அடைந்ததும், அவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்க-கனடா எல்லையைக் கடக்கிறார்கள் (இதுவும் குஜராத் மாடல்?)
டைம்ஸ் ஆப் இந்தியா:
* மனுஸ்மிருதி பாடத்திட்டத்தில்? டில்லி பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறை, முகலாய பேரரசர் பாபரின் நினைவுக் குறிப்புகளான பாபர் நாமாவுடன் பண்டைய சமஸ்கிருத உரையான மனுஸ்மிருதியையும் இளங்கலை பாடத்திட்டத்தில் சேர்க்க இந்த ஆண்டும் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு, சட்டப் பாடத்திட்டத்தில் மனுஸ் மிருதியை சேர்க்கும் நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டியிருந்தது.
.- குடந்தை கருணா