பானிபட், ஜூலை 11 நடுவழியில் பழுதாகி நின்ற ரயிலை அருகில் உள்ள ரயில் நிலையம் வரை பொது மக்களும் ராணுவ வீரர்கள் தள்ளும் காணொலி இணையத் தில் பரவி வருகிறது.
சாலையில் பழுதாகி நிற்கும் பேருந்தை, பயணிகள் கீழே இறங்கி தள்ளி ஸ்டார்ட் செய் வதை நேரில் பலர் கண்டதுண்டு. சிலர் அனுபவித்தும் இருப்பர். ஆனால், முதல் முறையாக பழுதாகி நின்ற ரயிலை தள்ளும் காட்சி வெளியாகியுள்ளது.
அரியானா மாநிலத்தில் டில்லி யில் இருந்து சென்ற பயணிகள் ரயில் ஒன்று பழுதாகி நின்று விட்டது. அது ஒற்றை ஒருவழிப் பாதை ஆகையால் இணைப்பு இஞ்சின் வருவதற்கு அருகில் உள்ள ரயில் நிலையம் வரை பழுதாகி நின்ற ரயிலைக் கொண்டு சென்றால்தான் இணைப்பு எஞ்சின் இணைத்து ரயிலை மீண்டும் இயக்க முடியும் என்பதால் ரயிலை அருகில் உள்ள ரயில் நிலையம் வரை தள்ளுவது என்று முடிவு செய்யப்பட்டது. அருகில் உள்ள ராணுவ முகாமில் இருந்து ராணுவ வீரர்களுக்கு ரயிலை தள்ள கோரிக்கை விடப்பட்டது. இதனை அடுத்து ராணுவ வீரர் களும், பிற பயணிகளும் இறங்கி, அந்த ரயிலை தள்ளி, அருகில் உள்ள சிறிய ரயில் நிலையம் வரை கொண்டு சென்றனர். பின்னர் இணைப்பு இஞ்சின் இணைக்கப் பட்டு ரயில் புறப்பட்டுச் சென்றது
‘வந்தே பாரத்’ போன்ற அதி நவீன ரயில்களை இயக்குவதாக பெருமை கொள்ளும் ஒன்றிய அரசு, மறுபக்கம், பிற ரயில் களையும் வழித்தடங்களையும் மிகவும் மோசமான நிலைக்கு கொண்டு சென்று விட்டனர்.