ஆங்கில தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் அமைச்சர் பிடிஆர் மற்றும் பிரபல ஊடகவியலாளருக்கு இடையே நடந்த உரையாடல்
கரண் தாப்பர்: மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறி பிடிவாதமாக ரூ 2100 கோடியை விட்டுக் கொடுப்பது சரியா? தமிழ்நாடு அரசுக்கு பெரிய இழப்பு அல்லவா?
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்: கடை வீதிகளில் சமூக விரோதி தன்னுடைய பேச்சைக் கேட்காவிட்டால் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறான். என்பதற்காக அந்த சமூக விரோதியின் பேச்சைக்கேட்கவேண்டுமா?
மிரட்டுபவனிடம் சென்று கேட்க வேண்டியதை நேர்மையாக நடப்பவர் களைப் பார்த்து கேட்கிறீர்கள்.
உத்தரப்பிரதேச, பீகார் மாநிலங்களில் எத்தனை மாணவர்களுக்கு மும்மொழி தெரியும்?
* இருமொழிக் கொள்கையில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை விட, மும்மொழிக் கொள்கையில் படிக்கும் பிற மாநில மாணவர்கள் முன்னேற்றம் அடைந்ததற்கான தரவுகள் ஏதேனும் உள்ளதா?
*தமிழ்நாடு இருமொழிக் கொள்கையைதான் பின்பற்றும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். கலாச்சார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சரியான இந்த கொள்கையால் தமிழ்நாடு மாணவர்கள் முன்னேறியுள்ளனர்”
கல்வித்தரத்தில் தமிழ்நாட்டை விட சிறந்த மாநிலம் குறித்து சான்றுகளோடு எந்த மாநிலம் சமமாக நிற்கிறது என்பதைக் கூறமுடியுமா என்று. இவ்வாறு தொலைக்காட்சி ஊடகவியலாளர் கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் கூறினார்.
கரண் தாப்பர் கடைசிவரை பிடிஆர் பழனிவேல் தியாகராஜரின் பதிலை எதிர்கொள்ள முடியாமல் அமைதி காத்தார்.
ஆயிரம் டீசல் பேருந்துகள்
எரிவாயு பேருந்துகளாக மாற்றம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் முடிவு
சென்னை, மார்ச் 4 தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளை டீசலில் இருந்து சிஎன்ஜிக்கு மாற்ற முடிவு செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் உள்ளூர், வெளி மாவட்டங்கள் என பல வழித்தடங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் டீசல் எரிபொருளில் இயங்கி வரும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக பேருந்துகளை சி.என்.ஜி. (CNG) கேஸ் எரிபொருள் முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
முதற்கட்டமாக இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1000 பேருந்துகள் சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் 8 லட்சம் கி,மீக்கு குறைவாக இயக்கப்பட்டவையாகவோ அல்லது 6-7 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட பேருந்துகளாகவோ இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.70 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.