விருதுநகர், ஜூலை 11 திருச்சுழி அருகே 8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டது. திருச்சுழி தாலுகா முக்குளம் அருகே சிறுவனூர் கிராமத்தின் காட்டுப் பகுதியில் பழைமையான சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் படி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், ராஜபாண்டி, நடராஜன், பாண்டியநாடு பண்பாட்டு மய்ய தொல்லியல் கள ஆய்வா ளரான சிறீதர் ஆகியோர் அங்கு சென்றனர்.
அப்போது அங்குள்ள சிற்பங் களை ஆய்வு செய்த போது அது
8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த முற்கால பாண்டியரின் சிற்பங்கள் என்பது தெரியவந்தது. இங்கு காணப்படும் சிலையானது 4 அடி உயர கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கண்களை பாதியளவு மூடிய படியும், உதடுகளில் சிறிய புன்னகையுடனும் முற்கால பாண் டியருக்கே உரிய கலைநயத்துடன் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள் ளது.மேலும் தற்போது கிராமமக்கள் அவ்வப்போது வந்து வழிபடும் ஒன்றாக இருந்து வருகிறது. இங் குள்ள சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது 1,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்த புத்தர் சிலையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது