பிஜேபியின் அரட்டை ஆசாமி ஒருவர் முதலமைச்சர் பொய் சொல்லக் கூடாது என்று கூறியதாக தின பூணூல் மலர் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. மாதம் 2 கோடி பேர்களுக்கு பிரதமர் மோடி வேலை தருவதாகச் சொன்னார் என்று முதலமைச்சர் குறிப்பிட்டதாகக் கூறி அப்படி யானால் 240 கோடி பேர்களுக்கு வேலை கொடுக்க முடியுமா என்று அந்த ஓட்டை வாய் உளறிக் கொட்டியுள்ளது.
மாதம் 2 கோடி பேருக்கு என்று முதலமைச்சர் கூறினாரா? ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு மோடி சொன்னதைத்தானே முதலமைச்சர் சுட்டிக் காட்டினார். பொய்யைத் தவிர வேறு பேசுவ தில்லை என்று சத்தியப் ‘பிரமாணம்’ செய்து கொண்டு விட்டதோ ஆர்.எஸ்.எஸ். கும்பல்? மேலும் எதையாவது கேட்டால் அதெல் லாம் ‘ஜூம்லா’ என்கின்றனர்.