சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டியில் வீரபாண்டி ஒன்றிய கழகம் கல்பாரப்பட்டி கிளைக் கழகம் துவக்க விழா! கழகக் கொடியேற்று விழா!!

viduthalai
3 Min Read

சேலம், மார்ச் 4- சேலம் – கல்பாரப்பட்டி கிராமத்தில் 22.2.2025 அன்று வீரபாண்டி ஒன்றிய கழகம், கல்பாரப்பட்டி கிளைக் கழகம் தொடக்க விழா வெகு சிறப்போடு நடைபெற்றது.

வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ்

கூட்டம் நடத்த வேண்டிய பகுதி கரடு முரடாக இருந்ததால், ஜேசிபி இயந்திரம் கொண்டு முதல் நாளே சீரமைக்கப்பட்டது. கல்பாரப்பட்டி தோழர்கள் கிராமம் முழுவதும் வீடு வீடாக சென்று, அழைப்பிதழ் கொடுத்து, மக்களை விழாவுக்கு அழைத்தனர். கல்பாரப்பட்டி கிராமத்தில் கழகக் கொடிகள் வெகு சிறப்பாக கட்டப்பட்டிருந்தன.

நிகழ்ச்சிக்கு முதல் நாள், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தலைமையில், மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு, மாவட்டச் செயலாளர் சி.பூபதி, பொதுக்குழு உறுப்பினர் சி.வேலாயுதம், பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தராசு, சந்தோஷ், சங்கர் உள்ளிட்ட தோழர்கள் சுயமரியாதைச் சுடரொளிகள் கே.சி.கந்தசாமி, ஆர்.ராஜா மற்றும் கழகத் தோழர் பெருமாள், மேனாள் ஊராட்சி தலைவர் எம்.பி.பழனிசாமி, சி.வேலாயுதம் உள்ளிட்ட தோழர்களின் இல்லங்களுக்கும், அனைத்துக் கட்சித் தோழர்களின் இல்லங்களுக்கும் சென்று, பயனாடை அணிவித்து சிறப்பு செய்து, நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர்.

காலை 11:00 மணிக்கு விழா துவங்கியது. மாவட்டத் தலைவர் வீரமணி ராஜு விழாவுக்கு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சி.பூபதி வரவேற்புரை கூறி, நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

பொதுக்குழு உறுப்பினர் சி.வேலாயுதம், க. கமலம், இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு.லோகநாதன் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் கழகக் கொடியேற்றினார்.

படத்திறப்பு

சுயமரியாதைச் சுடரொளி ரா.ராஜாவின் படத்தை, கல்பாரப்பட்டி பெரியார் பெருந்தொண்டர் ரா.கோவிந்தராசு, ஜாதி ஒழிப்பு போராளி கே.சி.கந்தசாமியின் படத்தை, மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்செல்வி ஆகியோர், தோழர்களின் வாழ்த்தொலிகளுடன் திறந்து வைத்தனர்.

மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் தொடக்க உரை ஆற்றினார்.

மாநில மகளிரணிச் செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, கல்பாரப்பட்டி ஊராட்சி மேனாள் தலைவர் எம்.பி. பழனிசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். தொடர்ந்து, தஞ்சை இரா.பெரியார் செல்வன் எழுச்சியுரை ஆற்றினார். விழாவில், புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
வீரபாண்டி ஒன்றிய கழகத்தின் பொறுப்பாளர்கள்:

தலைவர்: ரா.சங்கர்
செயலாளர்: ம. பிரேம்குமார்
கல்ப்பாரப்பட்டி கிளைக்கழகம்:
தலைவர்: ஆர்.கோவிந்தராசு
செயலாளர்: ரா. சந்தோஷ்
வீரபாண்டி ஒன்றிய மகளிர் பாசறை:
தலைவர்: வே.பூங்கொடி
செயலாளர்: ச. தமிழ்மணி
வீரபாண்டி ஒன்றிய இளைஞரணி:
தலைவர்: பெ.மோகன்ராஜ்
செயலாளர்: ச. தனபால்

புதிய பொறுப்பாளர்களுக்கு சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், தஞ்சை இரா பெரியார் செல்வன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கழக பொறுப்பாளர்களுக்கு கல்பாரப்பட்டி திமுக சார்பில், மேனாள் ஊராட்சி தலைவர் எம் பி பழனிசாமி பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கழக பொறுப்பாளர்களுக்கும், திமுக, அதிமுக, பாமக, மற்றும் கிராம பொறுப்பாளர்களுக்கும் சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

விழாவில், சுயமரியாதைச் சுடரொளிகளின் உறவினர்களும், திமுக, அதிமுக, பாமக பொறுப்பாளர்களும், தோழர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து
கொண்ட தோழர்கள்:

ஆத்தூர் மாவட்ட தலைவர் அ சுரேஷ், செயலாளர் நீ சேகர், சேலம் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் துரை சக்திவேல், மேட்டூர் மாவட்ட தலைவர் கா. நா.பாலு, செயலாளர் ப. கலைவாணன், கல்பாரப்பட்டி மேனாள் ஊராட்சி தலைவர் கே. வெங்கடாசலம், சேலம் மாவட்ட ப. க. தலைவர் வழக்குரைஞர் சுரேஷ்குமார், மேட்டூர் மாவட்ட ப. க. தலைவர் கோவி. அன்புமதி, க. கமலம், தி மு க கிளைச் செயலாளர் எம்.சுதா, பொறியாளர் சிவக்குமார், பேங்க் ராஜு, எடப்பாடி ஆர் எம் சண்முகசுந்தரம், வெண்ணந்தூர் ஒன்றிய கழகச் செயலாளர்இல. ப. செல்வகுமார், தமிழ்மணி, நிகல்யா, சுதா, பழனிவேலு, ஏ.காளியப்பன், எஸ் தனபால், அம்பிகா, வள்ளி, கே கிருத்திகா, வே.பூங்கொடி, எஸ் பழனியப்பன், த.தமிழரசு, சுப்பிரமணி, கோவிந்தராசு, வேலு, பூபதி, மூர்த்தி, ராஜு, நடேசன், சி. மணி, கே.சோபனா, பி. சின்ராஜ், எம்.பிரேம்குமார், என் ஜெகன், பி.மோகன்ராஜ், இ. ரமேஷ், ராஜி, சேலம் குமாரசாமிப்பட்டி பெ. கண்ணன், தனலட்சுமி, மல்லிகா, கமலா, சின்னசாமி, சுரேஷ், கே. செங்கோட்டையன், எம். சின்னதம்பி, எம்.பி.குப்புசாமி, எ.முத்து, இ.பழனிசாமி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
அனைவருக்கும் மதிய உணவு விருந்தளிக்கப்பட்டது. கல்பாரப்பட்டி கிளைக் கழகச் செயலாளர் ரா. சந்தோஷ் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *