குன்னூரில் 1.3.2025 அன்று நடைப்பெற்ற நீலமலை மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்திற்கு மாநில இளைஞர் அணிசெயலாளர் நாத்திக பொன்முடி தலைமையேற்று நோக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞர் அணித்தலைவர் யா.பிரேம்குமார் மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் இரா.ராம்குமார் முன்னிலையில் நடைப்பெற்றது.
மரு. கவுதமன் சிறப்புரையாற்றினார். பழைய விடுதலை சந்தாக்களை புதுப்பித்து தருவது என்றும் திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நீலமலை மாவட்டத்தின் சார்பாக நிதி வசூல் செய்து தருவது என்றும் நீலமலை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கிராம மற்றும் திண்ணைப் பிரச்சாரங்கள், பள்ளி கல்லூரி நுழைவுவாயில்களில் துண்டறிக்கைகள், தகவல் பலகைகள் அமைத்து கொள்கைப் பரப்புரை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது