டெக்சாஸ், மார்ச் 3- தமிழ்நாட்டின் இரு மொழி கொள்கைக்கு ஆதரவாகவும், மும்மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்க வாழ் தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுத்து உள்ள னர். அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தின் மிகப் பெரிய நகரமான ‘டல்லாஸ்’ நகரத்தில் வாழும் அமெரிக்க வாழ் தமிழர்கள், மும்மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘தமிழன்’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட டீ சர்ட் அணிந்து, ‘மொழி என் உரிமை’, ‘அனைத்து மொழிக்கும் மதிப்புளியுங்கள்’, ‘தமிழ் போராடும்! தமிழ் வெல்லும்’, ‘ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்’ ஆகிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பான காணொலி நேற்று (2.3.2025) சமூக வலைத்தளங்களில் வைரலானது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த போராட்டம் குறித்த செய்தியை, ‘எக்ஸ்’ சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ் வாழ்க’ என்ற ‘ஹேஷ்டேக்’ பதிவிட்டு அதற்கு ஆதரவு தெரிவித்தார்.