டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பிற மாநிலங்களும் ஹிந்தித் திணிப்பை எதிர்க்க முன்வந்துள்ளன.ஆதிக்க மொழி திணிப்பை தடுத்து, அன்னை தமிழை காப்பேன்: தனது பிறந்த நாளன்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு, எஸ்.சி. பிரிவினரில் உள் ஒதுக்கீடு மசோதா: அடுத்த வாரத்தில் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெற்று, பிறகு சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடத்தி மசோதாவை நிறைவேற்ற முடிவு. அதனையடுத்து அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரை சந்தித்து தமிழ் நாட்டைப் போல், ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்திட வலியுறுத்தவும் திட்டம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* இந்தியாவின் தலைநகரம் டில்லி அரசு மருத்துவமனைகளில் அரசின் மிகப்பெரிய மருத்துவமனையான லோக் நாயக் மருத்துவமனையில், அறுவை சிகிச்சைகளுக்கு நீண்ட காத்திருப்பு நேரம், செயல்படாத அறுவைச் சிகிச்சை அரங்கம், நோயாளி ஆலோசனைக்கு மிகக் குறைந்த நேரம் என தலைநகரின் சுகாதார அமைப்பு குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 1971 மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றும், மாநிலத்தின் உரிமைகள் பாதிக்கப்படாது என்றும் மோடி எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி டெலிகிராப்:
* யு.ஜி.சி. புதிய வரைவு விதிகளில் கல்லூரிகளில் பாகுபாடு குறித்து தெளிவான 2012 விதிமுறைகள் நீக்கம். ஒரு மாணவன் ஜாதிகள், மதம், பழங்குடி அல்லது பிராந்தியத்தின் பெயர்களை அறிவிப்பது அல்லது ஒரு மாணவரை ஒதுக்கப்பட்ட பிரிவு நபராக முத்திரை குத்துவது அல்லது ஒரு மாணவன் ஜாதி அல்லது மதத்தை குறிப்பிட்டு கருத்துகளை வெளியிடுவது அல்லது ஆசிரியர்களை சந்திக்க மாணவர்களுக்கு வித்தியாசமான நேரத்தை ஒதுக்குவது அல்லது வசதிகளைப் பயன்படுத்துவதற்காக சில மாணவர்களை தனித்தனியாக நடத்துவது போன்ற பாகுபாட்டின் வடிவங்களை தெளிவாக வரையறுத்துள்ளது. இவை தற்போது நீக்கப்பட்டுள்ளன.
* உத்தரகாண்ட் பனிச்சரிவு: நான்கு பேர் இறந்தனர், அய்ந்து பேர் காணாமல் போயினர். தொழிலாளர்களின் பாதுகாப்பில் பாஜக அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.
* தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை பாதிக்கும் தொகுதி சீரமைப்பு குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது: அண்ணாமலை அறிவிப்பு
– குடந்தை கருணா