மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தமிழ்நாடு தொகுதி மறுசீரமைப்பில் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

2 Min Read

சென்னை, மார்ச் 2- நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்​தில், மக்கள் தொகையை கட்டுப்​படுத்திய தமிழ்நாடு ஏன் பாதிக்​கப்பட வேண்​டும் என்று சென்னை​யில் நடைபெற்ற பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பினார்.

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல மைச்சருமான மு.க.ஸ்​டா​லினின் 72ஆவது பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்டம் சென்னை கொட்​டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்​தில் 28.2.2025 அன்று நடைபெற்​றது. திமுக பொதுச்​செய​லாளர் துரை முருகன் தலைமை தாங்​கினார். மு.க.ஸ்​டா​லின் ஏற்புரை​யாற்றி பேசி​ய​தாவது:

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொள்கை கூட்டணி அமைத்து போராடி வருகிறோம். கருத்​தியல் கூட்டணி அமைத்​துள்ள எங்களுக்கு கருத்து மாறு​படுகள் வரும். ஆனால், ஒருபோதும் விரிசல் வராது. நமது ஒற்றுமையை பார்த்து இதில் விரிசல் வராதா என்று சிலர் எதிர்​பார்க்​கலாம். அவர்கள் ஆசையில்​தான் மண் விழும். என்னை முதலமைச்சர் நாற்​காலி​யில் உட்கார வைத்​துள்ள தோழமைக் கட்சி தலைவர்களை எனது இதய மேடை​யில் வைத்​துள்ளேன். நமது ஒற்றுமை, தமிழ்நாட்டின் உரிமையை, சமூகநீ​தியை, தமிழ்நாட்டை ஏன் ஒட்டுமொத்த இந்தியா​வையே காப்​பாற்றி​யுள்​ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்​பேரவை தேர்தலில் தப்பித்​தவறி ஒருவேளை அதிமுக-பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்​தால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாஜவிடம் அடகு வைக்​கப்​பட்​டிருக்​கும். பாஜக அதிமுகவை மிரட்டி கபளீகரம் செய்திருக்​கும். இந்த கொடிய சக்தி​களிட​மிருந்து தமிழ்நாட்டை மீட்ட கூட்டணி மதச்​சார்​பற்ற கூட்​டணி. ஒட்டுமொத்த இந்தியா​வுக்கே வழிகாட்டும் கூட்டணி நமது கூட்டணி.
ஒன்றிய அரசு எப்படி​யெல்​லாம் தமிழ்நாட்டை வஞ்சிக்​கலாம் என செயல்​படு​கிறார்​கள். நீட் தேர்வை கொண்டு​வந்​தனர். புயல் வெள்ள நிவராண நிதி தருவ​தில்லை. கல்வியை சீர்​குலைக்க தேசிய கல்விக் கொள்​கையை கொண்டுவர முயற்சிக்​கின்​றனர். நாம் அதை ஏற்க​வில்லை. உடனே கல்விக்கான நிதி தரமாட்​டோம். என்கிறார்​கள். வேதனை​யுடன் சொல்​கிறேன். குழந்தை​களின் கல்விக்​கும் ஆசிரியர்​களின் ஊதியத்​துக்​கும் நிதி தராத கொடூர மனம் படைத்​தோரின் ஆட்சி அதிகாரம் நடக்கிறது.

எங்கள் மீது ஹிந்தியை திணிக்​காதீர்​கள். தாய்​மொழி தமிழ். உலக தொடர்​புக்கு ஆங்கிலம். இது எங்களுக்​குப் போதும். தேவைப்​பட்​டால் ஹிந்தி மொழி அல்ல; அரபு மொழியைக் கூட கற்றுக்​கொள்​வோம். தமிழ்நாடு முன்னேற்​றத்​துக்கு இருமொழிக் கொள்​கை​தான் காரணம். இதை வடமாநிலத்​தினர் ஏற்றுக்​கொள்​கிறார்​கள். அனைத்து மாநிலங்​களுக்​கும் வழிகாட்​டியாக இருப்பது தமிழ்நாடு​தான். எங்களை மிரட்​டி​னாலும் உங்களால் ஹிந்தியை திணிக்க முடியாது. மிரட்​டலுக்கு ஒருபோதும் திமுக அடங்​கிப்​போ​காது.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டில் தொகு​தி​களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி செய்​கிறார்​கள். இப்போது பொத்​தாம் பொதுவாக தமிழ்நாட்டில் எண்ணிக்கை குறையாது என்கிறார்​கள். மற்ற மாநிலங்​களுக்கு தொகு​திகள் எண்ணிக்கை அதி கரிக்​குமா இல்லையா என்பது தெரி​யாது.

மக்கள்​தொகையை கட்டுப்​படுத்திய மாநிலம் ஏன் பாதிக்​கப்பட வேண்​டும். ஏன் இது விடயமாக பிரதமர் உறுதி அளிக்க​வில்லை. தற்போதைய மக்கள்​தொகை அடிப்​படை​யில் தொகுதி மறுசீரமைப்பு செய்​யப்​படாது. 1971ஆம் ஆண்டு மக்கள்​தொகை அடிப்​படை​யில்​தான் மேற்​கொள்​ளப்​படும் என்று உறுதி கொடுங்​கள். இந்த விவகாரத்​தில் உரிமைக் குரலை தெலங்​கானா, கருநாடகா மாநிலங்கள் எழுப்​பி​யுள்ளன. மற்ற மாநிலங்​களும் குரல் கொடுக்க வேண்​டும்.

இதுதொடர்பான அனைத்து கட்சி கூட்​டத்​தில் தமிழ்நாடு பாஜக​வும் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு துணையாக இருக்க வேண்​டும். அதன்​மூலம்​தான் நமது உரிமைகளை வென்​றெடுக்க முடி​யும். இவ்வாறு பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *