சிதம்பரம் கழக மாவட்ட செயலாளர் யாழ்திலிபன் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்து தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி, கழகத் துணைத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தனர். புதுவை மாநில தலைவர் சிவ வீரமணி, புதுவை இளவரசி சங்கர், வழக்குரைஞர் மணியம்மை நேரில் சென்று அவரை நலம் விசாரித்தனர். அவர்களுடன் சிதம்பரம் மாவட்ட தலைவர் பேராசிரியர் பூசி இளங்கோவன், ஆண்டிப்பாளையம் முருகன் மற்றும் புதுவை மாவட்ட செயலாளர் நண்பர்கள் உடன் சென்றனர்.