சென்னை, மார்ச் 1- சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது அனைத்து சமூகத்த வர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 75. தற்போது தலைமை நீதிபதியுடன் சேர்த்து 65 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 10 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.
சமூகநீதி
இந்நிலையில் இந்த காலியிடங் களை நிரப்பும்போது பட்டியல் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான் மையினர் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து சமூக நீதியை பின்பற்றக் கோரியும், அனைத்து சமூகம் மற்றும் அனைத்து வழக் குரைஞர்கள் சங்கங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கக் கோரியும் உயர் நீதிமன்ற ஆவின் நுழைவு வாயில் முன்பாக வழக்குரைஞர்கள் நேற்று (28.2.2025) கோரிக்கை விளக்க ஆர்ப் பாட்டம் செய்தனர்.
ஜனநாயக மற்றும் சமூக நலன்களுக்கான வழக்குரைஞர்கள் மய்யத்தின் தலைவரான மூத்த வழக்குரைஞர் சி.விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பார் கவுன்சில் உறுப்பினர்களான ஆர்.சி.பால்கனகராஜ், வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பாரதி, சீனிவாசன், சிவா, பார்வேந்தன், கண்ணன், பார்த்திபன் எம்.வேல்முருகன், ஜிம்ராஜ் மில்டன் மற்றும் பல பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட அனைத்து வழக்குரைஞர் சங்க பிரதிநிதிகளும் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கி முழக்கம் எழுப்பினர்.