வேலூர் – 2, தொரப்பாடி எஸ்ஆர்எம் நகரில் வசிக்கும் திருப்பத்தூர் மாவட்ட கழக காப்பாளர் பெரியார் பெருந் தொண்டர் ஆர்.நரசிம்மனின் மருமகளும், வேலூர் மாநகர திராவிடர் கழக தலைவர் ந.சந்திரசேகரனின் வாழ்விணை யருமான ச.சூரியகலா (வயது 54) அறிந்து 12.7.2023 புதன்கிழமை காலை 8.15 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இன்று மாலை 5 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றபின் “பலவன் சாத்து குப்பம் இடுகாட்டில்” உடல் அடக்கம் நடைபெற்றது.
குறிப்பு: மறைவு செய்தி அறிந்ததும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மன்னார்குடி – கோட்டூரிலிருந்து தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு ந.சந்திரசேகரனி டம் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.