நம்முடைய எரிமலையின் இல்ல மணவிழா அழைப்பிதழ் செலவினை பார்க்கும்போது ஒரு புத்தகமே போட்டுக் கொடுத்திடலாம். அழைப்பிதழுக்கே இவ்வளவு செலவு செய்யக்கூடாது. ஏன் என்னுடைய படத்தை பெரிதாக போடறீங்க? மணமக்கள் படங்களைத்தான் பெரிதாக போட வேண்டும். கதாநாயகர்கள் அவர்கள்தான். அழைப்பிதழ் தகவலுக்காகத்தான். இனிமே திருமணம் செய்துவைக்க கூடியவர்கள் சிக்கனமாக செலவு செய்து, மீதமாகும் பணத்தை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு கொடுங்கள் அல்லது பெரியார் உலகத்திற்குக் கொடுங்கள். நேற்று கூட பள்ளிக்கூடம் படிக்கும் பெண் குழந்தை உண்டியல் காசை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார். அந்த மாதிரி முதலமைச்சர் நிவராண நிதிக்கு கொடுங்கள். பிரதமர் மோடிக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆதரவாக அனுப்புகிறோம் என்று திருமண வீட்டார் சாப்பாடு போடுவதில் கூட சிக்கனமாக இருந்து தமிழ்நாடு அரசின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புங்கள். சிக்கனம் என்பதுமூலம்தான் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். – மதுரையில் காலை 10 மணிக்கு நடைபெற்ற இரா.பிரபாகரன் – க.மதுமிதா இணையேற்பு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி உரையின் ஒரு பகுதி (27.02.2025)
‘‘திருமண செலவை குறைத்து மீதமாகும் பணத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புங்கள்’’
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books