திருவனந்தபுரம், ஜூலை 12 – கேரளாவின் பிரபல பத்திரிகையான மலையாள மனோரமா தீட்டியுள்ள தலையங்கத்தில், கரோனா எனும் பெருந்தொற்று தமிழ்நாட்டை உலுக்கி, மூச்சு முட்டும் நேரத்தில்தான் தி.மு.க. அரசு பதவி ஏற்றது என் றும், கரோனாவால் தொழில்துறையும், பொருளாதாரமும் சிதைந்து காலியான கஜானாதான் கையில் கிடைத்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு சிறிது சிறிதாக வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர முயற்சித்தும், தொழில் முதலீடுகளை தொடங்கியும் மாநிலத்தை அனை வரும் திரும்பிப் பார்க்கும் நிலைமைக்கு உயர்த்தியதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செயல்பாடு மிக முக்கியமானது என்று மலையாள மனோராமா குறிப்பிட்டுள்ளது.
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றதும் முதலில் கையெழுத்திட்டது பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச பயணத் திட்டம், ஆவின் பால் விலை குறைப்பு ஆகியவை என்றும் குறிப்பிட்டுள்ள மலையாள மனோரமா, இவை குடும்ப பெண்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நற்பெயரை ஏற்படுத்தி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. பள்ளிகளில் காலை உணவுத் திட்டம், உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் ஆகிய திட்டங்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட உள்ளது என்று மலையாள மனோரமா பத்திரிகை பாராட்டு தெரிவித்துள்ளது. ஆட்சிக்கு வந்த 9 மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல், ‘உள்ளாட்சியிலும் மலரட்டும் நல்லாட்சி’ என்ற அழைப்பை மக்கள் ஏற்று செயல்படுத்தினார்கள். சட்டமன்ற தேர்தலில் 67% இடங்களில் வெற்றிபெற்ற, திமுக உள்ளாட்சி தேர்தலில் 80% வார்டுகளில் வெற்றிபெற்றதாகவும் மலையாள மனோரமா தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் முன்பை விட மூன்று மடங்கு அதிக பெரும்பான்மை வாக்குகளோடு கூட்டணிக் கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார் என்றும் மலையாள மனோரமா தலையங்கத்தில் குறிப்பிடப்பட் டுள்ளது. கடந்த முறை கைவிட்டுப் போன ஒரு மக்களவை இடத்தையும் சேர்த்து 40 தொகுதிகளையும் கைப்பற்றுவதே தி.மு.க.வின் குறிக்கோள் என்றும், பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் முன்னின்று செயலாற்றி வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் என்றும் மலையாள மனோரமா தெரிவித்துள்ளது.