28.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் (மார்ச் 1) விழாவில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்பு.
* தொகுதி வரையறை, தமிழ்நாட்டை மணிப்பூர் போல ஆகிவிடும், அமைச்சர் கீதா ஜீவன் எச்சரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* வங்க தேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காரண மான மாணவர் அமைப்பு ’ஜனநாயக மாணவர் அமைப்பு’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.
* தொகுதி வரையறை குறித்து தெளிவான விளக்கத்தை ஒன்றிய அரசு தர வேண்டும், என்கிறது தலையங்க செய்தி.
* தென் மாநிலங்களை மவுனமாக்க தொகுதி மறுவரையறை ஆயுதம், அமித்ஷா அறிக்கைகள் நம்பத் தகுந்தது அல்ல: தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைப்பதை எதிர்த்து தென் மாநிலங்கள் கூட்டு போராட்டம்: கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு.
* யு.ஜி.சி.யின் வரைவு அறிவிக்கையை எதிர்த்து தெலுங்கானா கல்வி ஆணையம் தீர்மானம். ஒன்றிய கல்வி அமைச்சருக்கும், யு.ஜி.சிக்கும் அனுப்பியது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* யுஜிசிக்கு எதிரான மற்றொரு மனு மீதான விசாரணையின் போது, ‘யுசிசியில் தேவையான மாற்றங்களைச் செய்ய நீங்கள் தயாரா?’ உத்தர கண்ட் உயர்நீதிமன்றம் மாநில அரசுக்கு கேள்வி.
* பீகாரின் முங்கர் நகரில் பஜ்ரங் தளத்தின் சிவராத்திரி கொண்டாட்டங்களின் போது “லவ் ஜிஹாத்” என்ற அலங்கார ஊர்தி ஒன்று இடம்பெற்றது, இது மாநிலத்தில் ஒரு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதை வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் முயற்சி என கடும் எதிர்ப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* டில்லி, மகாராட்டிரா தேர்தல்களில் பாஜக போலி வாக்காளர்களை பயன்படுத்தியுள்ளது.தேர்தல் ஆணையத்தின் ஆசிர்வாதத்துடன் பாஜக வாக்காளர் பட்டியலை எவ்வாறு கையாளுகிறது என்பது தெளிவாக தெரிகிறது. தேவைப்பட்டால் வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்யவும், போலி வாக்காளர்களை நீக்கவும் கோரி, தேர்தல் அலுவலகம் முன் காலவரையற்ற தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்” மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு.
* முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களை துன் புறுத்தும் மேற்பார்வையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை.
தி இந்து:
* செபி தலைவராக துஹின் காந்த் பாண்டே நியமனம். ஒரிசா பார்ப்பனரான பாண்டே, ஏர் இந்தியா தனியார் வசம் தாரை வார்க்க உழைத்தவர். தற்போதைய செபி தலைவர், பங்குச் சந்தை மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட மாதவி புரி புச்சின் 3 ஆண்டு பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
* பிரதமர் கார்ட்டூனை ‘தணிக்கை செய்ய முயலும்’ உத்தரவை விகடன் எதிர்க்கும். கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவும், விகடன் பத்திரிகையின் வலைத்தளத்திற்கான அணுகலை மீட்டெடுக்கவும்” நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு.
* கோட்சேவை புகழ்ந்து பேசிய என்.அய்.டி பேராசிரியை அதே கல்லூரியில் டீன்-ஆக நியமனம்; காங். கடும் எதிர்ப்பு. டாக்டர் ஷைஜா தற்போது இந்த என்.அய்.டி நிறுவனத்தில் இயந்திர பொறியியல் துறையில் பேராசிரியராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு காந்தியாரின் நினைவு நாளில் நாதுராம் கோட்சேவை புகழ்ந்தார்.
தி டெலிகிராப்:
* மணிப்பூர் கலவரம் குறித்தும், கும்பமேளா ஜன நெரிசலில் பலி குறித்தும் மவுனம் காக்கும் பிரதமர் மோடி, கும்பமேளாவில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கிறார் என்கிறார் கட்டுரையாளர் ஜே.பி.யாதவ்.
.- குடந்தை கருணா