‘‘உலகில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய இடம் இந்தியா சார்பில் இடம் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு!’’

Viduthalai
1 Min Read

‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை பட்டியலை வெளியிட்டு பெருமிதம்!

‘நியூயார்க்டைம்ஸ்’ பத்திரிக்கை வெளியிட்ட உலகில் ஒருமுறையாவது பார்க்கவேண்டிய இடங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது இந்தியா சார்பில் இடம் பெற்றுள்ள ஒரே மாநிலம் நம் தமிழ்நாடுதான்.
இந்த ஆண்டு உலகில் ஒருமுறை யாவது பார்க்க வேண்டிய 52 இடங்களின் பட்டி யலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா சார்பில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இடம் தமிழ்நாடு தான்! உலகின் முக்கிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு 24ஆவது இடத்தை பிடித்ததற்கு காரணம், இங்குள்ள கலாச்சாரம் மற்றும் இங்குள்ள மக்களின் பண்பாட்டை வளர்க் கும் கட்டட அமைப்புகளும் தானாம்.

உலக அரங்கில் இந்திய கலாச் சாரம் பெரிதாக பேசப்படும்போது, அதில் தமிழ்நாட்டுக் கலாச்சாரத் திற்கு கிடைத் திருக்கும் இந்த அடையாளம் மறுக்க முடியா ததுதான். தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள் பழைமை வாய்ந்தததாகவும், கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், செட்டிநாடு பகுதியில் உள்ள 18ஆம் நூற்றாண்டின் சிறந்த கட்டடங்கள் என பல பெருமைகளை தாங்கி நிற்கும் தமிழ்நாட்டை இந்த வருடம் கட்டாயம் பார்க்க வேண்டும் என ‘நியூயார்க் டைம்ஸ்’ கூறியுள்ளது.

மெட்ரோ நகரங்களில் அழகு வாய்ந்த மெக்சிகோ நகரம், கனடாவின் பெரியநகரமான டொராண்டோ, பெரிய உணவு விடுதிகளுக்கு பெயர்போன துபாய், உணவுகளில் பல வகைகளை காட்டும் துருக்கியின் செஸ்மே, பழைமையான நகரமான சீனாவின் ஹாங்கு போன்ற நகரங்களின் வரி சையில் தமிழ்நாடு 24-ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதில் உலகின் முன்னணி வரிசையில் உள்ள வாசிங்டன் பார்சிலோனா, வியட்நாம், கான்சாய், சிட்னி, கிரீஸ் போன்ற இடங்கள் தமிழ்நாட்டைவிட பின்னால் உள்ளது என்பதுதான் தமிழ்நாட்டின் கலாச்சாரத்துக்கு கிடைத்த பெருமையாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்களின் கலாச்சாரம் உலக அளவில் கூட தோற்காது என்பதை தான் இந்த பட்டியலும் கூறுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *