சென்னை, ஜன. 18-– தி.மு.க. அரசின் 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் அருந்ததியினர் சமூகத்தினரின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாக, ‘தி இந்து’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு
2009ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில், வழங்கப்பட்ட அருந்ததியின ருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பு திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் பெற்றுள்ள வெற்றிக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான பரிசு என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான, சமூக நீதியை நிலை நாட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அருந்ததியினருக்கு 3 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதன் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அருந்ததியினரின் சமூக மேம்பாடு உயர்ந்துள்ளதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. ‘தி இந்து’ ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில், கடந்த 2018–2019 ஆம் ஆண்டுகளில் தமிழ் நாட்டில் மருத்துவ இடங்கள் 3 ஆயிரத்து 600 ஆக இருந்த நிலையில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 80 சதவீதம் அதிகரித்து 6 ஆயிரத்து 553 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மருத்துவக் கல்வியில் அருந்ததியர் களின் பிரதிநிதித்துவம் குறித்து வெளிவந்துள்ள தரவுகளின்படி 2018-2019 ஆம் ஆண்டில் எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 3,600 இடங்களில் 107 இடங்கள் அருந்ததியர் மாணவர்களுக்கு கிடைத்திருந்தன. ‘திராவிட மாடல்’ ஆட்சியில் 2023-2024 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் 6,553 ஆக உயர்த்தப்பட்டு, அதன் மூலம் 193 அருந்ததிய சமூக மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்குச் சென்றிருக்கிறார்கள்.
சமூக மேம்பாடு
இதன்மூலம் அருந்ததியின சமூகத்தினரின் சமூக மேம்பாடு அதிகரித்துள்ளதாக அந்த நாளேடு தெரி வித்துள்ளது. இதேபோன்று, பொறியியல் படிப்புகளில்கடந்த 2009 ஆம் ஆண்டில் ஆயிரத்து 193 ஆக இருந்த அருந்ததியின சமூக மாணவர்களின் எண்ணிக்கை, தி.மு.க. அரசின் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு மூலம் 3 ஆயிரத்து 944 ஆக உயர்ந்துள்ளது.
கல்வி மட்டுமின்றி அரசு வேலை வாய்ப்புகளிலும் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவு அருந்ததியின சமூகத்தினர் பயன்அடைந்துள்ளதாக அந்த நாளேடு குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள அரசு தேர்வுகளிலும் 3 சதவீத இடஒதுக்கீடு மூலம் அருந்ததியின சமூகத்தினர் பலன் அடைந்துள்ளனர்.
வெற்றி பெறும் தி.மு.க. அரசின் சட்டம்
தி.மு.க. அரசு எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களைமுறையாக ஆராய்ந்து, தரவுகளைத் தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, பரிந்துரைகளைப்பெற்று சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருவதால், தி.மு.க. அரசின் சட்டம் எப்போதும் வெற்றியையே பெற்று வருவது வரலாறு ஆகியுள்ளதாக பாராட்டியுள்ளது.
துணை ஒதுக்கீடு
ஆகஸ்ட் 2024 நடுப்பகுதியில், கல்வி மற்றும் பொது வேலைவாய்ப்பில் கடந்த 15 ஆண்டுகளில் 2009 சட்டத்தின் செயல்திறன் குறித்தும் மாநில ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு துணை ஒதுக்கீடு வழங்குவதற்கு முந்தைய 15 ஆண்டுகளில்அருந்ததியர்களின்இருப்பு நிலை குறித்ததரவுகளையும் கோரியது.
தமிழ்நாடு அருந்ததியர் இடஒதுக்கீடு சட்டம், 2009 இன்படி– பட்டியல் ஜாதிகளில் (SCs) அருந்ததி யர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. சட்டத்தின் நோக்கத்திற்காக, அரசியலமைப்பின் 341 வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவரால் அறிவிக்கப்பட்ட பட்டியலில் அருந்ததியர், சக்கிலியன், மதரி, மதிகா, பகாடி, தோட்டி மற்றும் ஆதி ஆந்திரா ஆகிய ஏழு ஜாதியினர் பொதுவாக அருந்ததியர்கள் என்று அழைக்கப்படு கின்றனர்.
‘முன்னுரிமை இல்லாத இடங்களுக்கு போட்டியிட அனுமதிக்கப்படும் சமூகத்திற்கான சட்டத்தில் இடஒதுக்கீட்டில் நெகிழ்ச்சிக் கொள்கை’ ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உச்சநீதி மன்றமும் அரசமைப்புச் சட்டத்தின் இந்த ஏற்பை ஒப்புக் கொண்டது.
2008 நவம்பரில் நீதிபதி (ஓய்வு பெற்ற) எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையிலான ஒரு உறுப்பினர் குழுவின் அறிக்கையை மாநில அரசுக்கு சமர்ப்பித்ததைத் தொடர்ந்து சட்டம் இயற்றப்பட்டது. குழுவின் கண்டு பிடிப்புகளின்படி, முன்பு அரசு சமர்ப்பித்ததில் மேற்கோள் காட்டப்பட்டது.கடந்த ஆண்டு நீதிமன்றம், மாநிலத்தில் எஸ்.சி. மக்கள் தொகையில் சுமார் 16% (2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) இருந்த போதிலும், அருந்ததியர்களின் பங்கு; அவர்களின் மக்கள் தொகை விகிதத்தில் எஸ்.சி. ஒதுக்கீடுஇல்லை. இது பொறியியல் படிப்புகளில் 8.76%ஆகவும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் பாரா மருத்துவப் படிப்புகளில் 7.3% ஆகவும்இருந்தது. மாநில அரசின் குழுக்கள் A, B மற்றும் Cசேவைகளில், சமூகத்தின் பிரதிநிதித்துவம் மோசமான முறையில் ‘போதுமானதாக இல்லை”. குரூப் ‘A’ மற்றும் ‘B’ சேவைகளில் 7.14% மற்றும் 6.72% முதல் குரூப் C இல் 9.29% வரை மட்டுமே. குரூப் D விஷயத்தில் இது 32.4% ஆக இருந்தது. இந்த அம்சம் குறித்து கருத்து தெரிவித்த மாநில அரசாங்கம், சட்டத்திற்கான பொருள் மற்றும் காரணங்களின் அறிக்கையில், “அவர்களில்பெரும்பாலோர் தோட்டக் காரர்கள் என்பதால் அவர்களுக்கு – கல்வித் தகுதிகள் எதுவும் தேவையில்லை” என்று கூறியது.
தி.மு.க. அரசின் 3 சதவிகித இடஒதுக் கீடு சட்டம் மூலம் அருந்ததியின சமூகத்தினரின் வாழ்வில் மறு மலர்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது.
– ‘The Hindu’, 17.1.2025