கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

26.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* 8 எம்.பி. தொகுதிகளை குறைக்க ஒன்றிய அரசு திட்டம் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்: தொகுதி சீரமைப்பு பற்றி விவாதம் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
*ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போர் தொடரும், மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* எஸ்.சி. உள் ஒதுக்கீடு மார்ச் மாதத்தில் நடை முறைப்படுத்த தெலங்கானா அரசு முடிவு.
* சி.பி.எஸ்.இ., அய்.சி.எஸ்.இ., மற்றும் அனைத்து பள்ளிகளிலும், வரும் கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பில் தெலுங்கு கட்டாய மொழி என தெலுங்கானா அரசு அறிவிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஒன்றிய அரசின் வரைவு வேளாண் கொள்கையை பஞ்சாப் சட்டமன்றம் ஒருமனதாக நிராகரித்தது, ரத்து செய்யப்பட்ட சட்டங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சி என குற்றச்சாட்டு.
தி ஹிந்து:
* 2023-2024ஆம் ஆண்டில் தேர்தல் அல்லது பொது பிரச்சாரத்திற்காக பாரதிய ஜனதா கட்சி (BJP) ₹1,755 கோடியை செலவிட்டது, என்கிறது ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) பகுப்பாய்வின் அறிக்கை.
* ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மசோதா சட்டப் பூர்வ சவாலில் தோல்வியடையும் என்று முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித், நாடாளுமன்ற குழு முன் சாட்சியம்.
* மூன்றாவது மொழி கட்டாயம் இருக்க வேண்டுமா? மாநிலங்கள் மேற்கொள்ளும் செலவினங்களின் பங்கையும், பிராந்திய பன்முகத்தன்மையும் கருத்தில் கொண்டு, பள்ளிக் கல்வி தொடர்பான கொள்கை விஷயங்களில் மாநிலங்களுக்கு அதிக சுயாட்சி வழங்குவது குறித்து அரசுகள் சிந்திக்க வேண்டும் என்கிறார் ரங்கராஜன்,அய்.ஏ.எஸ்.
தி டெலிகிராப்:
* அக்னிபாத் திட்டம், இளைஞர்களின் நம்பிக்கை களை சிதைத்துள்ளது. அக்னிபாத் படையில் பணி அமர்த்தப்பட்டவர்களில் எழுபத்தைந்து சதவீதம் பேர், அதாவது அக்னி வீரர்கள், நான்கு ஆண்டுகளாக ஓய்வூதியம் அல்லது பணிக் கொடை இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர். ஜூன் 2022 இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஆயுதப் படைகளில் மன உறுதியையும் தொழில்முறைத் திறனையும் சேதப்படுத்தும் என்று பல முன்னாள் படைவீரர்கள் கூறியுள்ளனர்.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *