1. Technical Training Programme: 60 இடங்கள். பயிற்சி காலம்: 6 மாதங்கள். வயது: 01.01.2025 தேதியின்படி 18 முதல் 24க்குள் இருக்க வேண்டும். தகுதி:வெல்டர்/டிராப்ட்ஸ்மேன்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ மிஷினிஸ்ட்/ டர்னர் ஆகிய ஏதாவதொரு டிரேடில் அய்டிஅய் படிப்பு படித்து என்டிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Technical Training Programme: 60 இடங்கள். பயிற்சி காலம்: 6 மாதங்கள். வயது: 01.01.2025 தேதியின்படி 18 முதல் 24க்குள்.
i) சிஎன்சி புரொகிராமர்: தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு
ii) வெப் டெவலப்பர்: தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/அய்டி பாடத்தில் டிப்ளமோ/பி.இ.,/ பிஎஸ்சி.,
iii) ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர்: தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/அய்டி பாடத்தில் டிப்ளமோ/பி.இ.,/பிஎஸ்சி.,
iv) டிசைனர் மெக்கானிக்கல்: தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ/ பி.இ.,
v) மெக்கட்ரானிக்ஸ் மெயின்டெனன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்: தகுதி: இன்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ/பி.டெக்.,/பி.இ.,அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். அய்டிஅய்/டிப்ளமோ/பி.இ., படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். ரூ.1 லட்சம் வரை உதவித் தொகை வழங்கப்படும். தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு வரும் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nlcindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.03.2025.