நாகப்பட்டினம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
நாகப்பட்டினம், பிப். 25- 20.02.2025.வியாழன் மாலை 5 மணியளவில் வேளாங்கண்ணியில் மாவட்ட தலைவர் இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையிலும் நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஸ்குப்தா கழக காப்பாளர் கி.முருகையன்.மாவட்ட துணை செயலாளர் கி.சுர்ஜீத்.நாகை நகர தலைவர் தெ.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ந.கமலம் ஆகியோர்கள் முன்னிலையிலும் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார் .
மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி கருத்துரையாற்றினார்கள் . கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா.ஜெயக்குமார். திருமருகல் ஒன்றிய தலைவர் எம். சின்னதுரை, கீழையூர் ஒன்றிய தலைவர் ஆர்.இரங்கநாதன், வேதாரணியம் ஒன்றிய தலைவர் மு.அய்யப்பன். நாகை ஒன்றிய செயலாளர் எம்.கே. சின்னதுரை. மாவட்ட இளைஞரணி தலைவர் சு.இராஜ்மோகன், நாகை நகர செயலாளர் சண்.ரவி, மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் இரா.அறிவுமணி, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் செ.கவிதா, ஆசிரியர் அலமேலு, அமுதா, இளைஞரணி குருநாதன், சிறீராம். ப.திலீபன், வி.வி.சிறீதர் மாணவர் கழகம் கு.ராஜீ, செ.திராவிடமணி. ஏ.தண்டபாணி ஆகியோர் பங்கு பெற்று சிறப்பித்தனர். கு.கமலராஜன் நன்றியுரையாற்றினார்.
தீர்மானங்கள்:
15.02.2025 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
சந்தாக்களை
புதுப்பிப்போம்
உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு விடுதலைக்கு நாகை மாவட்டத்தில் முடிவடைந்த சந்தாக்களை புதுப்பித்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரும் முயற்சியில் திருச்சி சிறுகனூரில் 95-அடிஉயர பெரியார் சிலையுடன் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நாகை மாவட்டத்தின் சார்பில் நிதி வசூல் செய்து வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
நாகை மாவட்டத்தில் கிராமம் முதல் பேரூராட்சி, நகராட்சி, உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழகப் பிரச்சாரக் கூட்டங்களை பரவலாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை அழைத்து வேதாரணயத்தில் சிறப்பாக சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது .
புதிய பொறுப்பாளர்கள்
வேதாரண்யம்-இளைஞரணி
வேதை ஒன்றிய இளைஞரணி தலைவர் – கு.கமலராஜன்
ஒன்றிய இளைஞரணி செயலாளர் – ப.திலீபன்
மாணவர் கழகம் – வேதாரண்யம்
ஒன்றிய திராவிட மாணவர் கழக தலைவர் – கு.ராஜூ
ஒன்றிய திராவிட மாணவர் கழக செயலாளர் – செ.திராவிடமணி.