இலால்குடி கழக மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதி, வாழ்மானபாளையம் மறைந்த கழக தோழர் வேலுவின் வாழ்விணையரும், திருச்சி கல்வி வளாகம் மகளிர் விடுதி உணவகத்தில் பணிபுரியும் அறிவுகண்ணுவின் தாயாருமான சந்திரமதியம்மாள் (வயது 78) இன்று (25.02.2025) விடியற்காலை மறைவுற்றார். பகல் 1 மணியளவில் சந்திரமதியம்மாள் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கழகத் தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர் .