கிருட்டிண அவதார்ம் அதிலும் சிறப்பாக கிருட்டிணனின் திருவிளையாடல்கள் சிருட்டிக்கப்படுவதற்கு என்ன அவசியம் வந்தது? அதாவது மூடநம்பிக்கைக்காக கிருட்டிணனும், ஒழுக்கக்கேடு ஏற்பட அவனது திருவிளையாடல்கள் லீலைகள் ஆகியவை கற்பிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவும் செய்துவிட்டு அவை கடவுள் நடத்தை- வாக்கு என்பதற்காகக் கீதையும் வெகு நாளைக்குப் பின் எழுதிச் சேர்க்கப்பட்டது இத்தகைய அவதாரக் கதைகள் – புத்தரால் அறிவும் ஒழுக்கமும் ஏற்பட்டதைத் தடுப்பதற்கும், மூடநம்பிக்கை வளர்ப்பதற்குமேயன்றி அறிவு வளர்ச்சிக்குச் செய்தது என்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’