திருச்சி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட மகளிர் அதிகார மய்யம், ஒருங்கிணைந்த சேவை மய்யம், துறை வாயிலாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராகுல்காந்தி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டார்.
அதன்படி குழந்தைகளின் நலனுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் சிறந்த என்.ஜி.ஓ.வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லம் தேர்வு செய்யப்பட்டது. திருச்சியில் 24.2.2025 அன்று நடைபெற்ற விழாவில் சிறந்த என்.ஜி.ஓ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி கேடயமும், பாராட்டு சான்றும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.