இராணிப்பேட்டை, பிப். 25- ‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றியவரும், எழுத்தாளருமான ரெ.அரங்கசாமி (வயது 80) நேற்று (25.2.2025) பகல் 1 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
‘கடவுளர் கதைகள்’ என்ற நூலை எழுதியவர். ஏ.கஸ்தூரி என்ற வாழ்விணையரும், மகன் ஏ.செல்வம், மகள் ஏ.கவிதா ஆகியோர் இவருக்கு உள்ளனர். அவரது கண்கள் ‘விழிக்கொடை’க்கு வழங்கப்பட்டன.
இராணிப்பேட்டை மாவட்டம், முகுந்தராயபுரம் அவரது மகன் இல்லத்திலிருந்து இன்று (25.2.2025) பிற்பகல் 2 மணியளவில் இறுதி ஊர்வலம் புறப்பட்டு இறுதி நிகழ்வு நடைபெற்றது.
வடசென்னை மாவட்ட கழக காப்பாள கி.இராமலிங்கம், தோழர் சீனிவாசன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.
விடுதலை செய்திப் பிரிவில் பணியாற்றிய அரங்கசாமி மறைவு

Leave a Comment