சென்னை,ஜூலை12– நாடா ளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் வரும் 14இல் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலர் துரைமுருகன் 10.7.2023 அன்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் 14-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற வுள்ளது.
கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், திமுகவைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப் பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மழைக்கால கூட்டத் தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து கூட்டத் தில் விவாதிக்கப்பட உள்ளது. கூட் டத்தில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்படவுள் ளன.
குறிப்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள், பொது சிவில் சட்டம் உட்பட முக்கிய விடயங்களை எழுப்புவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள் ளன.