வழக்குரைஞர் சட்டத் திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த சட்ட திருத்தம் மூலம் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என பெயர் மாற்ற ஒன்றிய அரசு துடிப்பதாகவும் விமர்சித்துள்ளார். தமிழ், தமிழர்கள் என்றாலே பாஜக வெறுப்பை காட்டு வதாகவும், இதற்கெல்லாம் ஒன்றிய அரசு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும் எனவும் சாடியுள்ளார்.