முத்திரைத்தாள் அச்சகத்தில் 65 டெக்னீசியன்கள் பதவி : அய்டிஅய் படித்திருந்தால் போதும்

2 Min Read

அரசியல்

மகாராட்டிரா மாநிலம், மும்பையில் உள்ள முத்திரைத்தாள் அச்சகத்தில் 65 டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக உள்ளன. அய்டிஅய் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Junior Technician (Fitter) : 24 இடங்கள் (எஸ்சி-5, ஒபிசி-6, பொருளாதார பிற்படுத்தப் பட்டோர்-2, பொது-11).

2. Junior Technician (Turner): 4 இடங்கள் (எஸ்டி-1, பொது-3)

3. Junior Technician (Attendant Operator-Chemical Plant): 11 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-7)

4. Junior Technician (Moulder): 3 இடங்கள் (பொது)

5. Junior Technician (Heat Treatment): 2 இடங்கள் (பொது)

6. Junior Technician (Foundryman/ Furnaceman):10 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-5)

7. Junior Technician (Blacksmith): 1 இடம் (பொது)

8. Junior Technician (Welder): 1 இடம் (பொது)

9. Junior Technician (Carpenter): 1 இடம் (பொது)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது : 15.07.23 தேதியின்படி 25க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.18,780- 67,390.

தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடில் அய்டிஅய் தேர்ச்சியுடன் என்சிவிடி/எஸ்சிவிடியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

10. Junior Office Assistant: 6 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1, ஒபிசி-2, பொது-2).

11. Junior Bullion Assistant: 2 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 28க்குள்.

ஊதியம்: ரூ.21,540-77,160

தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 55% மதிப் பெண்களுடன் தேர்ச்சியும், கணினி அறிவும், நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 40 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்ய தெரிந் திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி பிரிவி னருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 வருடங் களும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

பணி எண் 10 மற்றும் 11க்கு இணைய வழி தேர்வு மூலமும், இதர பணிகளுக்கு திறன் தேர்வு (ஸ்கில் டெஸ்ட்) தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது/ஒபிசி/ பொருளாதார பிற்படுத்தப் பட்டோருக்கு ₹600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திற னாளிகளுக்கு 200/-. இதை இணைய வழியில் செலுத்த வேண்டும்.

www.igmmumbai.spmcil.com  என்ற இணைய தளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.07.2023.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *