கும்பமேளாவில் ஆயிரக்கணக்கானோர் நீராடி வருகின்றனர். இது வரை 56 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளனர் என்று அரசு கதை விட்டுள்ளது
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில சிறைத்துறை அதிகாரிகள் திரிவேணி சங்கமத்தின் நீரை மாநிலத்தில் உள்ள அனைத்து சிறைகளுக்கும் சாமியார் முதலமைச்சரின் உத்தரவுப் படி கொண்டு வந்தனர். 75 சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 90 ஆயிரம் கைதிகள் கும்பமேளாவில் இருந்து கொண்டுவரப்பட்ட அழுக்கு நீரில் நீராடினர்.
இதுதொடர்பாக அதிகாரிகளின் கூறுகையில், திரிவேணி சங்கமம் தண்ணீரை வழக்கமான நீரில் கலந்து சிறிய தொட்டிகளில்
சேமிக்கப்பட்டது. கைதிகள் நீராடவும், ஜெயிலிலேயே பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்பட்டனர் என்று கூறினர்.
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறைத்துறை அமைச்சர் தாரா சிங் சவுகான் கூறுகையில், சுமார் 90 ஆயிரம் கைதிகள் நீராடினர். கைதிகளின் பாவங்கள் நீங்க முதலமைச்சர் அக்கறையோடு செயல்படுகிறார் என்றார். (எப்படி இருக்கிறது?)
மேலும் சிறைக் கண்காணிப்பாளர் உதய் பிரதாப் மிஸ்ரா கூறும்போது, சிறையில் 757 கைதிகள் உள்ளனர். சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் மகா கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரைக் கொண்டு நீராடினர். அனைவரும் மத வேறுபாடு இல்லாமல் நீராடியதாக அவர் கூறினார்.
(பாவம்தான் ஓடிப் போய் விட்டதே! சிறையிலிருந்து விடுவிக்க வேண்டியது தானே!)