பூதலுரில் முப்பெரும் விழா – பெரியார் உலகத்திற்கு நன்கொடை அளிப்பு

Viduthalai
3 Min Read

பூதலூர், பிப். 24- பூதலூர் நகரத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ம. செல்லமுத்து அவர்களின் இல்ல அறிமுக விழா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் விழா மற்றும் ஜாதி ஒழிப்பு வீரர் ம.செல்லமுத்து அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா அவர்களின் இல்லத்தில் மிக எழுச்சியோடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில், பூதலூர் ஒன்றிய தலைவர் அகரப்பேட்டை வீரமணி அவர்கள் வரவேற்புரை வழங்கினார், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, ஒன்றிய செயலாளர் அல்லூர் பாலு ஆகியோர் முன்னிலையேற்றனர்,
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்ற பெரியார் பெருந்தொண்டர் ம.செல்லமுத்துவின் இல்ல அறிமுக விழாவில் அவரின் 88ஆவது பிறந்த நாள் வாழ்த்து கூறியும் அவர் கலந்து கொண்ட ஜாதி ஒழிப்பு போராட் டத்தை பற்றியும், அவரின் மனந்தளராத கொள்கைப்பிடிப்புகளையும், அவர் தலைமையில் இயங்கும் குடும்பத்தி னர்களின் வாழ்வியலையும், அதற்காக அவர் உழைத்து வளர்ந்த விதத்தினையும், சமுதாயத்தில் நிலவும் தேவையற்ற மூடநம்பிக்கைகள் ஒழிக்கப்பட வேண்டும் எனவும், அவர் 88 வயதை கடந்தும் நூற்றாண்டை கடந்தும் அவருடைய சமூகப்பணி தொடர வேண்டும் எனவும் வாழ்த்தினார்.

உலகம் பெரியார் மயம் பெரியார் உலகமயம்

மேலும் 92ஆவது பிறந்த நாள் காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பையும் அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை, “உலகம் பெரியார் மயம் பெரியார் உலகமயம்” என்று சொல்லும் அளவிற்கு உலகெங்கிலும் பெரியார் சிந்தனைகளை கொண்டு சேர்க்கும் 92 வயது இளைஞரை போன்று சுறுசுறுப்போடு செயல்படும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிந்தனைகளையும், உழைப்பையும் எடுத்து கூறியும் உரையாற்றினார்.
கழக பேச்சாளர் கலைவாணி வீரமணி, தஞ்சை மாநகர இணைச்செயலாளர் இரா.வீரகுமார், மாவட்ட ப.க.துணைத்தலைவர் ஜெ.பெரியார் கண்ணன், பூதலூர் ஒன்றிய துணைத் தலைவர் ரெ.புகழேந்தி, பெரியார் பெருந்தொண்டர் வளப்பக்குடி கோ.தங்கவேல், பூதலூர் ஒன்றிய துணைச்செயலாளர் ப.விஜயகுமார் உள்ளிட்ட அனைவரும் ம.செல்லமுத்து அவர்களுக்கு 88ஆவது பிறந்த நாள் வாழ்த்துக் கூறி சிறப்பு செய்து மகிழ்ந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் தஞ்சை மாநகர துணைசெயலாளர் இரா.இளவரன், ஓட்டுநர் செந்தில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்ந்து நிகழ்வில் ஏற்புரை வழங்கிய ம.செல்லமுத்து அவர்கள் பெரியார் கொள்கையினை ஏற்று வாழ்ந்த வாழ்வையும்,தொடர்ந்து இவரோடு ஜாதி ஒழிப்பு போராட்டத்தில் சிறை சென்ற தோழர்களையும், சுயமரியாதை சுடரொளிகளையும் நினைவு கூர்ந்து அவர்களோடு சிறையில் நடந்த கொடுமையினையும் நினைவு கூர்ந்தார்.
தனது வாழ்நாளில் குடும்பத்தில் தனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை கல்வியின் மீது அதிக முனைப்புடன் செயல்படவும்,
உறவுகளை நலம் விசாரிப்பது, மேலும் தனது இறுதிக் காலம் வரை பெரியார் கொள்கையினை ஏற்று நடப்பதே எனது வாழ்வில் ஏற்படும் மகிழ்வான தருணம் என்று தனது ஏற்புரையில் கூறினார்.
மேலும் தனது பிறந்த நாள் மகிழ்வாக “பெரியார் உலகத்திற்கு” ரூபாய் 1000/- த்தை மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்.
இறுதியில் அவரது பேரன் முனைவர் அன்பரசு எனது தாத்தா வாழ்வின் வழிகாட்டியாக விளங்கினார் என்று கூறி வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார்
இறுதியில் வருகை தந்த அனை வருக்கும் உணவு வழங்கி மகிழ்ந்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *