சராசரி இந்தியர்களின் ஆயுட்காலம் என்ன?
உலகில் வாழும் மக்களின் சராசரி ஆயுட்காலம் மாறுபடக்கூடியவை. ஹாங்காங் மக்கள் சராசரியாக 85 ஆண்டுகள் வாழ்கிறார்கள் என்று அய்க்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் கூறுகிறது. நைஜீரிய மக்கள் மிகக் குறைந்த ஆயுட்காலமாக 53 ஆண்டுகள் வரை வாழுகிறார்களாம். இப்பட்டியலில் இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 67 ஆண்டுகள் எனவும் பாகிஸ்தானியர்களின் ஆயுட்காலம் 66 ஆண்டுகள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
உங்க குழந்தைக்கு
ஆதார் எடுக்கப் போறீங்களா?
உங்கள் குழந்தைகளுக்கு 5 வயது முடிந்து ஆதார் பயோமெட்ரிக் எடுக்க போறீங்களா? அதற்கு முன் இதை சரிபார்த்துவிட்டு செல்லுங்கள். குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெற்றோரின் முதலெழுத்து இருந்தால் மட்டுமே ஆதார் பயோமெட்ரிக் எடுக்க முடியும். இல்லையென்றால் திரும்பி அனுப்பப்படுவீர்கள். மீண்டும் பிறப்பு சான்றிதழில் முதலெழுத்தைச் சேர்த்து வந்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பயோமெட்ரிக் எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள்.