பொது சிவில் சட்டம் பற்றி ஆய்வு செய்ய மேனாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தலைமையில் குழு – காங்கிரஸ் அறிவிப்பு

2 Min Read

புதுடில்லி ஜூலை 12 பொது சிவில் சட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்க, மேனாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை யில் 8 தலைவர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைத் துள்ளார். 

மத்தியப் பிரதேசம் போபால் நகரில், கடந்த மாதம் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை அமல்படுத்து வதன் அவசியம் குறித்து பேசி னார். அதே நேரத்தில் சட்ட ஆணையம் இது குறித்து கருத் துகளை கேட்டு வருகிறது. மத்தி யப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடை பெறவுள்ள நிலையிலும், அடுத் தாண்டு மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையிலும், பொது சிவில் சட்டம் குறித்த பேச்சு பாஜக.வின் தேர்தல் பிரச்சார வியூகமாக பார்க்கப் படுகிறது. 

இதனிடையே, பொது சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரி விக்கும் சிறுபான்மை அமைப்புகள் இது தொடர் பான விவாதத்தை நடத்தி வருகின்றன. இதற்கு பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால், அவர் களுக்கு மட்டும் பொது சிவில் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கலாம் என பாஜக.வில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். பொது சிவில் சட்டத்தை கொண்டு வரும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவிக்கும்வரை இது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என காங்கிரஸ் கூறியுள்ளது. ஆனாலும், பொது சிவில் சட்டம் குறித்து பாஜக பேசுவது, வாக்காளர்களை பிரிக்கும் மற்றொரு முயற்சி என காங்கிரஸ் குற்றம் சாட்டி யுள்ளது. இப்போதைக்கு பொது சிவில் சட்டம் தேவையில்லை என முந்தைய சட்ட ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்ததையும் காங்கிரஸ் சுட்டிக் காட்டியுள்ளது. 

அதே நேரத்தில் பொது சிவில் சட்டம் அறிவிக்கப்பட்டால், அதில் காங்கிரஸின் நிலைப் பாட்டை தெரிவிக்க கட்சியினரை தயார்படுத்த வேண்டும். இதற்காக மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் சட்ட வல்லு நர்கள் உட்பட 8 தலைவர்கள் அடங்கிய குழுவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார் ஜூன கார்கே அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது சிவில் சட்டம் குறித்து இந்தக் குழு ஆராய்ந்து, கட்சித் தலைமைக்கு தேவை யான ஆலோ சனையை வழங்கும். ஆனால், இதன் அறிக்கை பொதுவில் வெளியிடப்படாது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *