மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்களுக்கும், மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கும்
முக்கிய வேண்டுகோள்
அருமைக் கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே,
திராவிடர் கழகப் பொதுக் குழு சிதம்பரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்தக் கால கட்டத்திற்கு கழகம் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள், கடமை உணர்வுகள் பற்றி கழகத் தலைவர் தனது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாவட்டக் கழக நிர்வாகிகள் தத்தம் மாவட்டக் கழகக் கலந்துரையாடலை உடனடியாக நடத்தி, சிதம்பரம் பொதுக் குழுவில் எடுத்த முடிவுகளை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.
மாநில ஒருங்கிணைப்பாளர்களும், பொறுப்பு மாவட்டங்களின் பொதுச் செயலாளரும் இப்பணிகள் நடைபெற ஆவன செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
பிரச்சாரத்தோடு புதிய கிளைக் கழகங்களை உருவாக்கும் முயற்சியும் முக்கியமானது. பிரச்சாரக் கூட்டங்களைப் புதிய இடங்களில், புதிய ஊர்களில் நடத்திடவும் கேட்டுக் கொள்கிறோம்.
– கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
(கழகத் தலைவர் ஆணைப்படி)