கைத்தறி ஆடை விற்பனை – தமிழ்நாடு, ஆந்திரா ஒப்பந்தம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, பிப்.23- தமிழ்நாட்டின் கோ-ஆப் டெக்ஸ், ஆந்திராவின் ஆப்-கோ ஆகிய இரு கைத்தறி நிறுவனங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம் நேற்று (21.2.2025) ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கையெழுத்தானது.

விஜயவாடாவில் விற்பனையாளர் – விநியோஸ்தர் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஜவுளி மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஆந்திர கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் சவிதா மற்றும் இரு மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஒப்பந்தம்

அப்போது கைத்தறி ஆடை உற்பத்தி, விற்பனை, நெசவாளர் பிரச்சினைகள், அவர்களுக்கு வழங்கப் படும் மானியம், நலத் திட்டங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப் பட்டது.
இதையடுத்து இவ்விரு அமைச்சர்கள் முன்னிலையில் இரு மாநிலங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இனி, இரு மாநிலங்களிலும், இரு மாநில கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
தமிழ்நாட்டின் கோ-ஆப் டெக்ஸ் கடைகளில் இனி ஆப்-கோ கைத்தறி ஆடைகளும் விற்பனை செய்யப்படும். இதுபோல் ஆந்திராவில் ஆப்-கோ கடைகளில் கோ-ஆப் டெக்ஸ் ஜவுளிகள் விற்பனை செய்யப்படும்.
இரு மாநிலங்களிலும் இந்த வருவாய் ஆண்டில் ரூ.9.20 கோடிக்கு கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
விரைவில் பிற மாநிலங்களுடனும் ஆப்-கோ இதுபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *