சென்னை, ஜூலை 13 உள்நாடு மற்றும் பன்னாட்டு போட்டிகளில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத் தொகை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2022ஆ-ம் ஆண்டு நடைபெற்ற சதுரங்க போட்டியில் பன்னாட்டு மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையை சார்ந்த ரோஹித் கிருஷ்ணாவுக்கு ரூ. 3 லட்சம், ஸ்பெயினில் நடந்த ஜூனியர் உலக பேட்மிண்டன் வாகையர் பட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த சங்கர் முத்து சாமிக்கு ரூ.4 லட்சம், ஆந்திராவில் நடைபெற்ற 57-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் வாகையர் பட்டப்போட் டியில் பதக்கங்கள் வென்ற 21 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ. 79 லட்சம், 2021-_2022ஆ-ம் ஆண்டு நடை பெற்ற சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் தேசிய அளவிலான சாப்ட்டென்னிஸ் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 56 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ. 2 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம், டோக்கியோவில் நடைபெற்ற பாரா பேட்மிண்டன் உலக வாகையர் பட்டப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 வீரர் – வீராங்கனைக்கு ரூ. 2 கோடியே 55 லட்சம், டில்லியில் நடைபெற்ற கான்டினென்டல் பெண்கள்சதுரங்க வாகையர் பட்டப் போட்டியில் பதக் கங்கள் வென்ற 3 வீரர்களுக்கு ரூ.15 லட்சம், கோலாலம்பூரில் நடைபெற்ற 20ஆ-வது ஆசிய ஸ்குவாஷ் வாகையர் பட்டப் போட்டியில் ஆண்கள் அணிகள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற வேலன் செந்தில்குமார், சவுரவ்கோஷல் ஆகிய இருவருக்கும் தலா ரூ.10 லட்சம், பெண்கள் அணிகள் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற ஜோஸ்னா சின்னப்பா, சுனைனா குரு வில்லா மற்றும் அபராஜிதா பாலமுருகன் ஆகிய மூவருக்கும் தலா ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 5 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரத் துக்கான காசோலைகளை 90 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கிடும் அடையாளமாக 9 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகைக் கான காசோலைகளை சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (12.7.2023) நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.