பார்ப்பனர் அல்லாதார் இயக்கமான தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத்தொடங்கிய சவுந்திரபாண்டியனார் 1926-ஆம் ஆண்டில் தந்தைபெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சுயமரியாதை இயக்க மாநாட்டு செங்கற்பட்டு நகரில் 1929ஆம் ஆண்டில் கூடியபோது அம்மாநாட்டிற்கு தலைமை வகித்தவர்
ராமநாதபுர மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது தாழ்த்தப்பட்ட மக்களை பள்ளிகளில் சேர்க்க மாட்டோம், பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என ஆதிக்க ஜாதியினர் தடுத்து நிறுத்தியபோது தாழ்த்தப்பட்ட மக்களை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும், பேருந்துகளில் செல்ல அனுமதிக்கவில்லை என்றால் பேருந்துகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என ஆணை பிறப்பித்து சமூக நீதியை நிலைநாட்டினார்.
சுயமரியாதை மாநாடுகளில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கொண்டு சமையல் செய்து மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைக் கொண்டு அனைவருக்கும் உணவு பரிமாற உத்தரவிட்டார்
1939ஆம் ஆண்டு ராஜாஜியின் தலைமையில் செயல்பட்ட சென்னை மாகாண அரசு தமிழ்நாட்டில் ஹிந்தியைக் கட்டாயமாக்க முயற்சி செய்தது இதை எதிர்த்து மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. தந்தை பெரியார், அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்ட தந்தை பெரியார் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது நாங்கள் சிறைக்குச் சென்றாலும் தமிழர் தளபதி சவுந்தர பாண்டியனார் இருக்கிறார். அவர் இருக்கும் வரை ஹிந்தி தமிழ்நாட்டில் நுழைய முடியாது. அவரது தலைமையில் போராட்டம் தொடரும் என அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவித்தார்.