புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைவு
புதுமைப் பெண் திட்டத்தால் இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் சேர்க்கை அதிகரித்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்காக பயனாளிகளை தேர்வு செய்ததை அனைவரும் பாராட்டியதாக குறிப்பிட்ட அவர், 1.14 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது என்றார்.
இதேபோல நான் முதல்வன் திட்டம் மூலம் 2.60 லட்சம் மாணவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே மாதத்தில் 80 லட்சம்
வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்
நாடு முழுவதும் ஒரே மாதத்தில் 80 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மோசடியை தடுக்கவும் வாட்ஸ் அப் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், மோசடி, ஸ்பேம் மெசேஜ் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்ட 80.45 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை வாட்ஸ் அப் முடக்கியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்து சமய
அறநிலையத்துறையில் வேலை
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள 76 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் விவரம், ஊதியம் எவ்வளவு, விண்ணப்பிப்பது எப்படி என்பது உள்ளிட்ட விவரங்களை இணையத்தில் பார்க்கலாம்.
பகவான் காப்பாற்றவில்லை!
உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் அருகே கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்களின் பேருந்து மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாலை 5 மணிக்கு நிகழ்ந்த இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 40 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.