முக்கால் பாகம் மலம் கலந்த நீர் குறித்து ஆங்கில. தமிழ் நாளேடுகளில் வந்த தலைப்புச் செய்திகளை சாமியார் முதலமைச்சர் ஆதித்யநாத் மறுத்துள்ளார். மறுத்த ஆதித்யநாத் ஒரு டம்ளர் நீரை நேரலையில் எடுத்துக் குடித்து நீர் தூய்மையானது என்பதை உறுதி செய்வாரா?
கும்பமேளா நீரைக் குடித்தவர் கோமாவில் செல்லும் நிலைக்கு ஆளாகிவிட்டதாக ஒரு மருத்துவர் பதிவிட்டுள்ளார்.
சமூகவலைதளத்தில் தீபேஷ் கோஷ் என்ற மருத்துவர் வெளியிட்ட பதிவில், என்னிடம் மிகவும் அவசர சிகிச்சைக்கு பெண் ஒருவரை அழைத்துவந்திருந்தார்கள், அவர் கும்பமேளாவில் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் முழுக்கு போட்டுள்ளார். அப்போது அதிக அளவு மலத் துகள்கள் கலந்த நீர் அவரது மூக்கில் சென்றுவிட்டது. அதில் உள்ள ஆபத்தை விளைவிக்கும் கிருமிகள் நேரடியாக அவரது நுரையீரலை அடைந்துவிட்டது. இதனால் அவர் மூச்சுத்திணறலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது நுரையீரல் சரியாக வேலைசெய்யாத காரணத்தால் செயற்கை கருவிகள் (வெண்டிலேட்டர் மூலம்) மூலம் ஆக்ஸிஜன் உடலில் செலுத்தப்பட்டு வருகிறது, மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் அளவு மிகவும் ஆபத்தான மூறையில் குறைந்துவிட்டது, இதனால் அவர் கோமா நிலைக்குச் செல்லும் துவக்க நிலையில் உள்ளார்.
மத நம்பிக்கை உண்மைதான், அது பற்றி நாங்கள் எதுவும் கூறவில்லை. ஆனால் சில நேரங்களில் உயிரைக் காப்பாற்ற அறிவியல் தான் முன்னுக்கு நிற்கிறது.
இதுபோன்று ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். ஆனால் ஏதோ ஒரு நிர்பந்தம், இதை எவரும் வெளியே சொல்லத் தயங்குகின்றனர். உயிர் இருந்தால் தான் சாமி கும்பிடமுடியும். சாமி கும்பிடுவதற்காக உயிரை விடாதீர்கள் என்று பதிவு செய்திருந்தார்.